இந்திய நாட்டவர் ஒருவருக்குப் பிணை கையெழுத்திடுவதற்காகப் பணம் பெற்றுக்கொண்டு, நீதிமன்றத்தில் போலியான ஆவணங்களைச் சமர்ப்பித்த குற்றச்சாட்டில் இருவருக்கு கொழும்பு பிரதான நீதிவான் அஸங்க எஸ். போதரகம இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
அடையாளம் தெரியாத நபர் ஒருவருக்குப் பிணை வழங்குவதற்காகப் பணம் பெற்றது, நீதிமன்றத்தில் போலி ஆவணங்களைச் சமர்ப்பித்தது மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தது ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஹ_சைன் மொஹமத் மற்றும் ஹசித் மொஹமத் ஆகிய இருவர் மீதே நீண்ட விசாரணையின் பின் குற்றம் நிரூபிக்கப்பட்டது.
இந்தநிலையில் சந்தேகநபர்கள் தரப்பில் சட்டத்தரணிகள் யாரும் முன்னிலையாகவில்லை.
இதன்போது. தமக்கு நீதி வழங்குமாறு அவர்கள் கோரியதுடன், தனக்கு ஒரு சிறிய குழந்தை உள்ளதையும் கருத்தில் கொள்ளுமாறு முதலாவது சந்தேகநபர் கோரிக்கை விடுத்தார்.
எனினும்,பணத்திற்காகப் போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து பிணை வழங்குவோருக்கு சமூகத்திற்கு ஒரு முன்னுதாரணமாக அமையும் வகையில் அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று மோசடி விசாரணைப் பிரிவு காவல்துறையினர் நீதிமன்றத்தில் கோரினர்.
இந்தநிலையில், சமர்ப்பிக்கப்பட்ட உண்மைகளைக் கருத்திற்கொண்ட பிரதான நீதிவான், இரு குற்றவாளிகளுக்கும் இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்தார். எனினும், குற்றவாளிகள் ஏற்கனவே ஆறு மாதங்கள் விளக்கமறியலில் இருந்த காலப்பகுதியை அவர்களது தண்டனைக்காலத்திலிருந்து கழித்துக் கொள்ளுமாறும் அவர் உத்தரவிட்டார்.
Latest News
டெய்லி மெயில் நிறுவனத்திற்கு 9.54 மில்லியன் ஸ்டெர்லிங் பவுண்டுகளைச் செலுத்த இளவரசர் ஹரிக்கு நீதிமன்றம் உத்தரவு
Local
21 August 2026
வரலாற்றில் முதன்முறையாக பாகிஸ்தானுக்கு ஏற்றுமதியாகும் இலங்கை அன்னாசிப்பழங்கள்!
Local
21 August 2026
இஞ்சி அழுகல் நோய் அச்சுறுத்தல்: ஏற்றுமதி விவசாயத் திணைக்களம் எச்சரிக்கை!
Local
21 August 2026
எல் நினோ வறட்சி அச்சுறுத்தல்: நீர் விநியோகச் சட்டங்களில் உடனடி திருத்தங்கள்!
Local
21 August 2026
மகாத்மா காந்தியின் தனிப்பட்ட சிந்தனைகள் ரூ.16.20 கோடிக்கு ஏலம்: இந்திய வரலாற்றில் புதிய சாதனை!
Local
21 August 2026
வளையாபதி முதல் பத்மஸ்ரீ விருது வரை: காலம் கடந்து சாதனை படைத்த சௌகார் ஜானகி
Local
21 August 2026
பகிரங்க மன்னிப்பு கோரினார் அர்ச்சுனா - நாடாளுமன்றத்தில் கடைசி உரை எனவும் அறிவிப்பு
Local
21 August 2026
அது வெறுப்பல்ல.. மகிழ்ச்சியான கேலி": இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் விளக்கம்
Local
21 August 2026
எரிபொருள் விலை உயர்வால் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் பாதிப்பு - நாடாளுமன்றத்தில் பிரதமர் விளக்கம்
Local
21 August 2026
2026 இறுதிக்குள் 9 பில்லியன் டொலர் வெளிநாட்டு கையிருப்பு இலக்கை அடைய முடியும் – நிதி பிரதி அமைச்சர்
Local
21 August 2026