நாட்டின் சிறுவர் பாதுகாப்பு, சட்டத் திருத்தங்கள், கல்வி மறுசீரமைப்பு மற்றும் மாணவர்களின் மனநலன் சார்ந்த நலன்புரித் திட்டங்கள் குறித்து, பிரதமர் ஹரிணி அமரசூரியவினால் நாடாளுமன்றத்தில் சிறப்புரையாற்றப்பட்டது.
இந்த சிறப்புரையில் உரையாற்றப்பட்ட விடயங்களாக,
நாட்டின் தற்போதைய சட்ட அமைப்பில் ‘சிறுவர்’ என்பதற்கான வயது வரையறை வெவ்வேறு சட்டங்களில் 14, 16 மற்றும் 18 என மாறுபடுவதால் ஏற்படும் இடைவெளிகளைக் களைந்து, சிறுவர்களுக்கு முழுமையான பாதுகாப்பை உறுதிசெய்ய புதிய சட்டத் திருத்தங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
மாணவர்கள், குறிப்பாக ஆண் மாணவர்கள்ள கட்டாயக் கல்வியைத் தாண்டி பாடசாலையிலிருந்து விலகும் போக்கைக் கட்டுப்படுத்தி, 13 வருட பாடசாலைக் கல்வியை நிறைவு செய்வதை உறுதிசெய்யும் வகையில் 2026 முதல் கல்விச் சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
முதலாம் தரத்திற்கான புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், 2027ஆம் ஆண்டில் 2 மற்றும் 6ஆம் தரங்களுக்கும் புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. மேலும், ஆரம்பக் கல்வியை மேம்படுத்துவதற்காக 2026ஆம் ஆண்டில் 1,200 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைத்து, தேவையான ஆலோசனைகளை வழங்குவதற்காக 2025இல் மாதிரித் திட்டமாகத் தொடங்கப்பட்ட 'C2 மையங்கள்', 2026ஆம் ஆண்டு முதல் பாடசாலைகளில் விரிவுபடுத்தப்படவுள்ளன.
பாடசாலை வாகனங்களுக்கான குறைந்தபட்ச பாதுகாப்புத் தரநிலைகளாக ஆசனப்பட்டி , பாதுகாப்பு கெமராக்கள் மற்றும் சாரதிகளுக்கான பயிற்சிகளைப் போக்குவரத்து அமைச்சு கட்டாயமாக்கியுள்ளது. அத்துடன், சுகாதார அமைச்சின் வழிகாட்டுதல்களுக்கு அமைவாக மாணவர்களுக்குச் சத்தான உணவு வழங்வதும் உறுதிசெய்யப்படும்.
விடுமுறைக் காலம் என்பது மாணவர்களின் மன அமைதிக்கு மிகவும் அவசியமானது என்பதால், அந்தக் காலப்பகுதியில் மாணவர்களுக்கு அளவுக்கு அதிகமான வீட்டுப் பணிகளை வழங்கி அழுத்தங்களை ஏற்படுத்த வேண்டாம் என அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிறுவர் பாதுகாப்பு என்பது வெறும் கல்வித் துறையோடு மட்டும் முடிந்துவிடாமல் சமூகம், போக்குவரத்து மற்றும் குடும்பப் பின்னணி உள்ளடங்கிய ஒருங்கிணைந்த செயற்பாடாகும் என இதன்போது வலியுறுத்தப்பட்டது.

Latest News
டெய்லி மெயில் நிறுவனத்திற்கு 9.54 மில்லியன் ஸ்டெர்லிங் பவுண்டுகளைச் செலுத்த இளவரசர் ஹரிக்கு நீதிமன்றம் உத்தரவு
Local
21 August 2026
வரலாற்றில் முதன்முறையாக பாகிஸ்தானுக்கு ஏற்றுமதியாகும் இலங்கை அன்னாசிப்பழங்கள்!
Local
21 August 2026
இஞ்சி அழுகல் நோய் அச்சுறுத்தல்: ஏற்றுமதி விவசாயத் திணைக்களம் எச்சரிக்கை!
Local
21 August 2026
எல் நினோ வறட்சி அச்சுறுத்தல்: நீர் விநியோகச் சட்டங்களில் உடனடி திருத்தங்கள்!
Local
21 August 2026
மகாத்மா காந்தியின் தனிப்பட்ட சிந்தனைகள் ரூ.16.20 கோடிக்கு ஏலம்: இந்திய வரலாற்றில் புதிய சாதனை!
Local
21 August 2026
வளையாபதி முதல் பத்மஸ்ரீ விருது வரை: காலம் கடந்து சாதனை படைத்த சௌகார் ஜானகி
Local
21 August 2026
பகிரங்க மன்னிப்பு கோரினார் அர்ச்சுனா - நாடாளுமன்றத்தில் கடைசி உரை எனவும் அறிவிப்பு
Local
21 August 2026
அது வெறுப்பல்ல.. மகிழ்ச்சியான கேலி": இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் விளக்கம்
Local
21 August 2026
எரிபொருள் விலை உயர்வால் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் பாதிப்பு - நாடாளுமன்றத்தில் பிரதமர் விளக்கம்
Local
21 August 2026
2026 இறுதிக்குள் 9 பில்லியன் டொலர் வெளிநாட்டு கையிருப்பு இலக்கை அடைய முடியும் – நிதி பிரதி அமைச்சர்
Local
21 August 2026