கல்முனை வடக்கு ஆதார மருத்துவமனைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட ஒன்பது முஸ்லிம் தாதியர்கள், தலை மற்றும் கால்களை மூடும் வகையிலான ஆடைகளை அணிந்து பணிக்கு வந்தபோது, அங்குள்ள சில ஊழியர்களால் தடுக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோதே அவர் இந்த விடயத்தை முன்வைத்தார்.
ஏனைய அரச மருத்துவமனைகளில் தாதியர்கள் தமது மத நம்பிக்கைகளுக்கு ஏற்ப தலை மற்றும் கால்களை மூடும் வகையிலான ஆடைகளை அணிந்து பணியாற்றுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், கல்முனை வடக்கு ஆதார மருத்துவமனையில் மாத்திரம் ஏன் இவ்வாறான கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது என அவர் கேள்வி எழுப்பினார்.
தாதியர்களின் மத நம்பிக்கைகளையும் தனிப்பட்ட உரிமைகளையும் மதிப்பது அவசியம் எனக் குறிப்பிட்ட அவர், குறித்த சம்பவம் வேதனையளிப்பதாகவும் தெரிவித்தார்.
2019ஆம் ஆண்டு இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்களுக்குப் பின்னர் வெளியிடப்பட்ட ஆடை தொடர்பான பழைய சுற்றறிக்கையை மறுபரிசீலனை செய்து, தாதியர்கள் தமது மத நம்பிக்கைகளுக்கு ஏற்ப ஆடை அணிந்து பணியாற்றுவதற்கு அனுமதிக்கும் வகையில் உடனடியாக புதிய உத்தரவைப் பிறப்பிக்குமாறு சுகாதார அமைச்சரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கோரிக்கை விடுத்தார்.
இந்த விவகாரத்தை இனவாதக் கண்ணோட்டத்தில் அணுகாமல், மனிதாபிமான அடிப்படையில் அணுக வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
அனைத்து சமூகங்களினதும் மத உணர்வுகள், உரிமைகள் மற்றும் ஆடை அணியும் சுதந்திரத்தை மதிக்கும் வகையில் அரசாங்கம் செயற்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தின் நியாயமான அடிப்படை உரிமைகள் உறுதி செய்யப்படுவதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திய நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, அனைத்து சமூகங்களுக்கும் சம உரிமையும் சம வாய்ப்புகளும் உறுதி செய்யப்படுவது அவசியம் எனவும் தெரிவித்தார்.

Latest News
டெய்லி மெயில் நிறுவனத்திற்கு 9.54 மில்லியன் ஸ்டெர்லிங் பவுண்டுகளைச் செலுத்த இளவரசர் ஹரிக்கு நீதிமன்றம் உத்தரவு
Local
21 August 2026
வரலாற்றில் முதன்முறையாக பாகிஸ்தானுக்கு ஏற்றுமதியாகும் இலங்கை அன்னாசிப்பழங்கள்!
Local
21 August 2026
இஞ்சி அழுகல் நோய் அச்சுறுத்தல்: ஏற்றுமதி விவசாயத் திணைக்களம் எச்சரிக்கை!
Local
21 August 2026
எல் நினோ வறட்சி அச்சுறுத்தல்: நீர் விநியோகச் சட்டங்களில் உடனடி திருத்தங்கள்!
Local
21 August 2026
மகாத்மா காந்தியின் தனிப்பட்ட சிந்தனைகள் ரூ.16.20 கோடிக்கு ஏலம்: இந்திய வரலாற்றில் புதிய சாதனை!
Local
21 August 2026
வளையாபதி முதல் பத்மஸ்ரீ விருது வரை: காலம் கடந்து சாதனை படைத்த சௌகார் ஜானகி
Local
21 August 2026
பகிரங்க மன்னிப்பு கோரினார் அர்ச்சுனா - நாடாளுமன்றத்தில் கடைசி உரை எனவும் அறிவிப்பு
Local
21 August 2026
அது வெறுப்பல்ல.. மகிழ்ச்சியான கேலி": இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் விளக்கம்
Local
21 August 2026
எரிபொருள் விலை உயர்வால் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் பாதிப்பு - நாடாளுமன்றத்தில் பிரதமர் விளக்கம்
Local
21 August 2026
2026 இறுதிக்குள் 9 பில்லியன் டொலர் வெளிநாட்டு கையிருப்பு இலக்கை அடைய முடியும் – நிதி பிரதி அமைச்சர்
Local
21 August 2026