அமெரிக்காவின் மொத்த தேசியக் கடன் வரலாற்றில் முதல் முறையாக 40 டிரில்லியன் டொலர்களை தாண்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க திறைசேரி இந்த தகவலை உறுதி செய்துள்ளது.
இதன்படி ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில் இந்தக் கடன் அளவு மிக விரைவாக உயர்ந்துள்ளது.
இந்தநிலையில், கடுமையான கடன் வாங்குதல், அதிகரித்த செலவினங்கள் மற்றும் குறைந்த வரிகள் போன்ற காரணங்களால் மிகப்பெரிய பொருளாதாரமான அமெரிக்காவில் நிதி நெருக்கடி ஏற்படக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் அஞ்சுகின்றனர்.
கடந்த இரண்டு தசாப்தங்களில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை மற்றும் கொரோனா பெருந்தொற்று போன்ற நெருக்கடிகளால், அமெரிக்க அரசாங்கம் அதிகளவில் கடன் வாங்கிச் செலவிட நேரிட்டது.
வயதான மக்களுக்கான ஓய்வூதியம் மற்றும் உடல்நலப் பாதுகாப்புச் செலவுகள் அதிகரித்துள்ள போதிலும், அதற்கு ஏற்ப வரி வருவாய் உயரவில்லை.
இந்தநிலையில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த மத்திய வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தியதைத் தொடர்ந்து, அமெரிக்கா தனது கடனுக்கான வட்டியாக மட்டுமே ஆண்டுதோறும் சுமார் 1.1 டிரில்லியன் டொலர்களைச் செலுத்த வேண்டியுள்ளது.
தற்போது அதிகரித்து வரும் இந்தக் கடன் சுமை எதிர்காலத்தில் கடுமையான சிக்கன நடவடிக்கைகள் மற்றும் வரியுயர்வு போன்ற பொருளாதாரச் சீர்திருத்தங்களை மேற்கொள்ள அரசைத் தள்ளக்கூடும் என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
Latest News
தமிழக மக்களின் அரசியல் முடிவு சரியானது - முதலமைச்சர் விஜய் குறித்து நடிகர் யாஷ் புகழாரம்!
Local
25 August 2026
அம்பலாங்கொடவில் அதிரவைக்கும் சம்பவம்: விடுதியில் தங்கியிருந்த நபர் மர்மமான நிலையில் உடலமாக மீட்பு!
Local
25 August 2026
எல் நினோ தீவிரமடைந்தால் இலங்கையில் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை
Local
25 August 2026
திடீரென உருவான சூப்பர்செல் சூறாவளி: பிரான்ஸில் நிலவும் பதற்றமான சூழல்!
Local
25 August 2026
முச்சக்கர வண்டி ஓட்டுநர்களுக்கான குறைந்தபட்ச வயது 40 ஆக அதிகரிக்கப்படுமா? – அரசாங்கம் தெளிவுபடுத்தல்!
Local
25 August 2026
கொழும்பில் இந்தியா - இலங்கை டெஸ்ட்: 3வது நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி தடுமாற்றம்!
Local
25 August 2026
விஜய் தீவிர அரசியலுக்கு வந்த பின் இது நடக்கலையே... : விஜய் – சங்கீதா திருமண நாளில் மீண்டும் கவனம்!
Local
25 August 2026
மத்திய கிழக்கு நிலைமை ஸ்திரமடையும் வரை QR எரிபொருள் விநியோக முறைமை தொடரும்!
Local
25 August 2026
கோடிகளில் புரண்டாலும் வெளிநாட்டில் காசாளராக வேலை பார்த்த ஜேசன் சஞ்சய் : வாழ்க்கையின் மறக்க முடியாத அனுபவம்!
Local
25 August 2026
மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் தீவிரம் - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ
Local
25 August 2026