2027 ஆம் ஆண்டிற்கான அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்துத் தனியார் பாடசாலைகளுக்கான பாடசாலை அட்டவணை மற்றும் விடுமுறைக்காலப் பட்டியலைக் கல்வி அமைச்சு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
இதன்படி, முதலாம் தவணை 2027.01.04 (திங்கள்) முதல் 2027.04.09 (வெள்ளி) வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதுடன், பாடசாலை விடுமுறை 2027.04.10 முதல் 2027.04.25 வரை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இரண்டாம் தவணை 2027.04.26 (திங்கள்) முதல் 2027.07.30 (வெள்ளி) வரை அமையும் என்பதுடன், பாடசாலை விடுமுறை 2027.07.31 முதல் 2027.08.29 வரை கிடைக்கப்பெறும்.
மூன்றாம் தவணை 2027.08.30 (திங்கள்) தொடங்கும் என்பதுடன், அன்றிலிருந்து 2027.12.03 (வெள்ளி) வரை அந்தத் தவணை நடைமுறையில் இருக்கும்.
2027 ஆம் ஆண்டில் 12 ஆம் தரத்திற்கான புதிய வகுப்புகள் 2027.06.15 அன்று தொடங்கப்படும் என்பதுடன், பாடத்திட்டங்களை நிறைவு செய்து தவணைப் பரீட்சைகளை நடத்தி 13 ஆம் தரத்திற்கான மூன்றாம் பாடசாலைத் தவணையை 2027.07.16 அன்று நிறைவு செய்ய வேண்டும் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2027 ஆம் ஆண்டின் முன்மொழியப்பட்ட அரசு விடுமுறை நாட்கள் மற்றும் பாடசாலை நாட்காட்டியின்படி அனைத்துப் பாடசாலைகளும் 197 நாட்கள் இயங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
2027 க.பொ.த. (உயர்தர) பரீட்சை 2027 ஆகஸ்ட் மாதத்திலும், 2027 க.பொ.த. (சாதாரண தர) பரீட்சை 2027 டிசம்பர் மாதத்திலும் நடத்தப்படவுள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Latest News
ஜனாதிபதி செயலாளருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து வெளிப்படையான விசாரணை தேவை - நாமல் வலியுறுத்தல்
Local
23 August 2026
நாடெங்கும் அதிகரிக்கும் வெப்பநிலை - முதலிடத்தில் பொலன்னறுவை!
Local
23 August 2026
தென்னாப்பிரிக்காவில் சோகம்: குத்துச்சண்டை ஜாம்பவான் சொலானி டெடே துப்பாக்கி தாக்குதலில் உயிரிழப்பு!
Local
23 August 2026
மனிதர்களை மிஞ்சிய தொழில்நுட்பம்: உசைன் போல்டின் 100மீ ஓட்ட சாதனையை நொறுக்கிய சீன ரோபோ!
Local
23 August 2026
அமெரிக்காவிற்கு கனடா அதிரடி பதிலடி: செப்டம்பர் 8 முதல் டொலருக்கு டொலர் வரி அமுல்!
Local
23 August 2026
உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய இடமின்றி தவிக்கும் மக்கள் காஸாவில் தொடரும் மயான நெருக்கடி!
Local
23 August 2026
ஊதா நிற மின்னல்: விண்வெளியில் இருந்து நாசா வீரர் எடுத்த அபூர்வ புகைப்படம்!
Local
23 August 2026
பேருந்தை விற்றுப் பணம் கொடுத்த உரிமையாளர்: போலி விமானி சிக்கியது எப்படி?
Local
23 August 2026
டோக்கியோவில் குலுங்கிய உயரமான கட்டிடங்கள்: ஜப்பானில் சக்திவாய்ந்த நிலஅதிர்வு!
Local
23 August 2026
BTS ரசிகர்களுக்கு ஆச்சரியம்! 'நமஸ்தே இந்தியா' என வைரலாகும் விளம்பர காணொளி!
Local
23 August 2026