போட்டிகளின் போது பல வீரர்கள் நீரிழப்பு, தலைச்சுற்றல் மற்றும் தற்காலிக மயக்கத்தால் பாதிக்கப்பட்டது தெரியவந்ததை அடுத்து, கடும் வெப்பத்திற்கு எதிராக வலுவான பாதுகாப்புகளை மேற்கொள்ளுமாறு தென்கொரிய தொழில்முறை கால்பந்து வீரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கொரிய தொழில்முறை கால்பந்து வீரர்கள் சங்கம், இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளது.
கோடைக்காலத்தில் ஆடுகளத்தின் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸை தாண்டும்போது, பல வீரர்கள் குறிப்பிடத்தக்க உடல் ரீதியான சிரமத்திற்கு உள்ளானமை கண்டறியப்பட்டது.
கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு வீரர்கள் போட்டிகள் அல்லது பயிற்சியின் போது தலைச்சுற்றல் இருப்பதாக முறையிட்டனர்
அதே நேரத்தில் 56.6 வீதமானோர்; கடுமையான நீரிழப்புக்கு உள்ளானார்கள் மற்றும் 13 வீதமானோர் சுயநினைவு இழப்புக்கு ஆளானார்கள்.
இந்தநிலையில், வீரர்களுக்கான தற்போதைய பாதுகாப்பு நடவடிக்கைகள் போதுமான அளவு பாதுகாக்கவில்லை என்று கூறி, கட்டாய வெப்ப நெறிமுறைகளை அறிமுகப்படுத்துமாறு கொரிய கால்பந்து சங்கம், நாட்டின் கால்பந்து கழகங்களை வலியுறுத்தியுள்ளது.
செயற்கை ஆடுகளங்களிலும், போதுமான குளிரூட்டப்பட்ட உடை மாற்றும் வசதிகள் இல்லாத இடங்களிலும், பகலின் வெப்பமான நேரத்தில் பல போட்டிகள் திட்டமிடப்படுவதால், கால்பந்தாட்ட வீராங்கனைகளும்; பெரும்பாலும் கூடுதல் சவால்களை எதிர்கொள்கின்றனர் என்று சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
Latest News
தென்னாப்பிரிக்காவில் சோகம்: குத்துச்சண்டை ஜாம்பவான் சொலானி டெடே துப்பாக்கி தாக்குதலில் உயிரிழப்பு!
Local
23 August 2026
மனிதர்களை மிஞ்சிய தொழில்நுட்பம்: உசைன் போல்டின் 100மீ ஓட்ட சாதனையை நொறுக்கிய சீன ரோபோ!
Local
23 August 2026
அமெரிக்காவிற்கு கனடா அதிரடி பதிலடி: செப்டம்பர் 8 முதல் டொலருக்கு டொலர் வரி அமுல்!
Local
23 August 2026
உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய இடமின்றி தவிக்கும் மக்கள் காஸாவில் தொடரும் மயான நெருக்கடி!
Local
23 August 2026
ஊதா நிற மின்னல்: விண்வெளியில் இருந்து நாசா வீரர் எடுத்த அபூர்வ புகைப்படம்!
Local
23 August 2026
பேருந்தை விற்றுப் பணம் கொடுத்த உரிமையாளர்: போலி விமானி சிக்கியது எப்படி?
Local
23 August 2026
டோக்கியோவில் குலுங்கிய உயரமான கட்டிடங்கள்: ஜப்பானில் சக்திவாய்ந்த நிலஅதிர்வு!
Local
23 August 2026
BTS ரசிகர்களுக்கு ஆச்சரியம்! 'நமஸ்தே இந்தியா' என வைரலாகும் விளம்பர காணொளி!
Local
23 August 2026
தொடருந்து நிலைய அதிகாரியான பூனை! மும்பை மெட்ரோவின் வைரல் 'தலைமைப் பூனை அதிகாரி'!
Local
23 August 2026
"நயன்தாரா படம் பார்க்க அடித்துப் பிடித்து நுழைவுச்சீட்டு வாங்கிய கவின்: வைரலாகும் சுவாரஸ்ய தகவல்!"
Local
23 August 2026