கொழும்பு துறைமுக நகர் என்று கூறப்படும் போர்ட் சிட்டி பகுதியில் சீன நாட்டவர் ஒருவர் கடத்தப்பட்டு உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக மேலும் 3 சீன சந்தேகநபர்களை இலங்கை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் பொதுமக்களின் உதவியையும் கோரியுள்ளனர்.
முன்னதாக, கடந்த ஜூலை 23ஆம் திகதியன்று கொழும்பு துறைமுக நகரில் வைத்து, இரண்டு சீனர்கள் மீது மற்றுமொரு சீனக்குழுவினர் தாக்குதல் நடத்தி, அவர்களில் ஒருவர் கடத்தி, உயிரிழந்ததாக காவலர்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் ஏற்கனவே 2 சீன நாட்டவர்கள், கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
தற்போது தலைமறைவாக உள்ள 3 பேரும் சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்தவர்கள் என்றும், அவர்களின் விசா காலம் முடிவடைந்துவிட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் வானூர்தி அல்லது கடல் வழியாக சட்டவிரோதமாக நாட்டை விட்டு வெளியேற முயற்சிக்கலாம் எனவும் காவல்துறையினர் எச்சரி;த்துள்ளனர்.
இந்தநிலையில் குறித்தவர்களின் இருப்பிடம் குறித்து தகவல் தெரிந்தவர்கள் கொழும்பு குற்றப் பிரிவு பொறுப்பதிகாரியை 071-8591735 என்ற எண்ணில் தொடர்புகொள்ளுமாறு காவல்துறையினர் கோரியுள்ளனர்.
Latest News
களுத்துறை – பயாகலையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் உயிரிழப்பு!
Local
31 August 2026
பயாகல - கொஸ்ஹேன பகுதியில் துப்பாக்கிச் சூடு!
Local
31 August 2026
ஆர்ஜென்டினா அணியின் தலைவர் லியோனல் மெஸ்ஸி தனது ஓய்வை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்
Local
31 August 2026
கொழும்பு துறைமுகத்தில் 463 கிலோ 'ஐஸ்' போதைப்பொருள் மீட்பு: இரண்டு பாகிஸ்தானியர்கள் உட்பட மூவர் கைது!
Local
31 August 2026
10 பில்லியன் டொலரைத் தாண்டிய இலங்கையின் ஏற்றுமதி வருமானம்!
Local
31 August 2026
22 ஆவது திருத்தச்சட்டமூலம் அடிப்படை உரிமைகளை அப்பட்டமாக மீறுகிறது : அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக மக்கள் திரள வேண்டும் - சஜித்!
Local
31 August 2026
அஜித்தின் ‘டேர் டெவில்’ படத்தில் ஷாலினி நடிக்கிறாரா? வெளியான புதிய தகவல்!
Local
31 August 2026
என் மகன் தீவிரவாதி அல்ல" - நடிகர் யாஷின் தாயார் புஷ்பா ஆதங்கம்
Local
31 August 2026
சுடுபடைக்கலன்கள் வைத்திருப்பவர்களுக்கான முக்கிய அறிவித்தல்!
Local
31 August 2026
தேசியப் பட்டியல் தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம் – ரவூப் ஹக்கீம் விளக்கம்!
Local
31 August 2026