General24 August 2026

கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளுக்கு புதிய மின்சார தொடருந்து திட்டம்: பணிகள் அடுத்த ஆண்டு தொடக்கம்

கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளை உள்ளடக்கிய புதிய மின்சார தொடருந்து திட்டத்தின் பணிகள் அடுத்த ஆண்டு ஆரம்பிக்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதற்கான ஆரம்பக்கட்ட திட்டமிடல் ஏற்கனவே நிறைவடைந்துள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதி அமைச்சர் ருவன் சேனரத் தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் உரையாற்றிய பிரதி அமைச்சர், முன்மொழியப்பட்டுள்ள இந்த மின்சார தொடருந்து சேவை மருதானையில் இருந்து ஆரம்பிக்கவுள்ளதாக பிரதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த புதிய திட்டத்தின் கீழ், 'ருஹ+ணு குமாரி' தொடருந்தில் பெலியத்தவில் இருந்து பயணம் செய்யும் பயணிகள், பாணந்துறையில் இறங்கி இந்த மின்சார தொடருந்து சேவை மூலமாக கொழும்பை நோக்கித் தமது பயணத்தைத் தொடர முடியும் என்றும் பிரதி அமைச்சர் ருவன் சேனரத் தெரிவித்துள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes