General25 August 2026

கொழும்பு மற்றும் கம்பஹாவில் குடிநீர் விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தம்

களனி ஆற்றின் நீர் இறைக்கும் பகுதியில் ஏற்பட்ட அவசர நிலை காரணமாக, நீரின் தரத்தைப் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் அம்பத்தளை மற்றும் களனி தென்கரை நீர் சுத்திகரிப்பு நிலையங்களின் செயற்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இதனால் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களின் பல பகுதிகளுக்கான குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

நிலைமை சீரானதும் நீர் விநியோகம் மீள ஆரம்பிக்கப்படும் எனவும், மேலதிக அறிவிப்புகள் பின்னர் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes