எல் நினோ மற்றும் லா நினா பருவநிலை சுழற்சியின் கடுமையான தாக்கங்களை எதிர்கொள்ள இலங்கை உடனடியாகத் தயாராக வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எச்சரித்துள்ளார்.
மாத்தறை - ஹம்பாந்தோட்டை, தல்ப பற்று பகுதியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் முதல் உலகளாவிய பல்வேறு நெருக்கடிகள் வரை இலங்கை ஏற்கனவே ஐந்து பெரிய பேரிடர்களைச் சந்தித்துள்ளதாகவும், விரைவில் ஆறாவது சவாலை எதிர்கொள்ள நேரிடலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
கடுமையான வறட்சியைத் தொடர்ந்து பலத்த மழை பெய்யும் அபாயம் இருப்பதாகவும், குறுகிய காலத்திற்குள் இந்த இரண்டு தீவிர வானிலை மாற்றங்களையும் எதிர்நோக்க நேரிடலாம் எனவும் நிபுணர்கள் எச்சரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
நிவாரண நடவடிக்கைகளுடன் மாத்திரம் நின்றுவிடாமல், இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் முறைகளைக் கற்றுக்கொண்டு புதிய பேரிடர் முகாமைத்துவ கட்டமைப்பு, புதிய திட்டங்கள் மற்றும் நிறுவனங்களை உருவாக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்த நாடுகள் வெளிநாட்டு அழுத்தங்களுக்கு எளிதில் இலக்காகக்கூடும் என்றும், சர்வதேச நிதி நிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் தாக்கங்களை எதிர்கொள்ள அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் சஜித் பிரேமதாச எச்சரித்தார்.

Latest News
2032 ஆம் ஆண்டுக்குள் வணிக ரீதியான உற்பத்தியே இலக்கு: இலங்கையின் எண்ணெய் அகழ்வாராய்ச்சிக்கு சர்வதேச முதலீட்டாளர்களை ஈர்க்கும் புதிய திட்டம்!
Local
27 August 2026
செம்மணி குறித்து சுயாதீன விசாரணைக்கு அவுஸ்திரேலியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தல்!
Local
27 August 2026
பிரபல ஹொலிவூட் நடிகர் டிம் கரி காலமானார்
Local
27 August 2026
இங்கிலாந்து கால்பந்தாட்ட வீரர் மீது கடுமையான குற்றச்சாட்டுகள்
Local
27 August 2026
அமெரிக்காவின் புதிய தடைகள் 'அரச மற்றும் பொருளாதார பயங்கரவாதம்' - ஈரான் கடும் கண்டனம்!
Local
27 August 2026
ஈரானில் ஒரு அமெரிக்க டொலரின் மதிப்பு 20 இலட்சம் ரியால்களைக் கடந்துள்ளது!
Local
27 August 2026
காஸா அமைதி சபை தோல்வியடைந்துவிட்டது- சர்வதேச அமைப்புகள் கவலை!
Local
27 August 2026
நீதித்துறைச் செயல்பாட்டை விரைவுபடுத்தவே புதிய திருத்தம்: ஜனாதிபதி திட்டவட்டம்
Local
27 August 2026
இந்தியாவில் ஏதிலிகளாக வாழும் இலங்கையர்கள் அச்சமின்றித் தாயகம் திரும்பலாம்!
Local
27 August 2026
நுவரெலியா - கிரெகரி வாவியின் நீரை குடிப்பதால் மனித உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என எச்சரிக்கை!
Local
27 August 2026