கடமை நேரங்களின் போது சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவது மற்றும் தொடருந்து இயக்க நடவடிக்கைகள் தொடர்பான உணர்திறன் வாய்ந்த தகவல்களைச் சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதைத் தடுப்பது தொடர்பில் தொடருந்து திணைக்களம் விசேட சுற்றுநிருபம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
சுற்றுநிருபத்தின் அறிவுறுத்தல்களை மீறிச் செயற்படும் அதிகாரிகளுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தொடருந்து பொது முகாமையாளரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட குறித்த சுற்றுநிருபத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடருந்து திணைக்களத்தின் சில அதிகாரிகளும் ஊழியர்களும் கடமை நேரங்களிலும் அதற்குத் தொடர்புடைய சந்தர்ப்பங்களிலும் சமூக வலைத்தளங்கள் ஊடாக உணர்திறன் வாய்ந்த தகவல்களை வெளிப்படுத்தும் போக்கு அவதானிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு உணர்திறன் வாய்ந்த தகவல்களைச் சமூக வலைத்தளங்கள் மூலம் பகிரங்கப்படுத்துவதன் மூலம் தொடருந்து சேவையின் நம்பகத்தன்மை, பயணிகள் பாதுகாப்பு மற்றும் நிறுவன ஒழுக்கம் ஆகியவை கடுமையாகப் பாதிக்கப்படுவதால் இந்தச் சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், தொடருந்து பொது முகாமையாளர், தொடருந்து திணைக்கள உத்தியோகப்பூர்வ ஊடகப் பேச்சாளர் மற்றும் தகவல் அதிகாரி ஆகியோருக்கு மட்டுமே தொடருந்து திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ தகவல்களை வெளித்தரப்பினருக்கோ அல்லது ஊடகங்களுக்கோ வழங்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இந்தப் புதிய சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது

Latest News
நேபாள வெள்ளப் பேரிடர்: இலங்கையிடமிருந்து நிவாரணப் பணிகளுக்காக 1 மில்லியன் டொலர் நிதியுதவி!
Local
27 August 2026
மாத்தறையில் தம்பதியர் கைது: ரூ. 70 மில்லியன் பெறுமதியான போதைப்பொருள் பறிமுதல்!
Local
27 August 2026
குழந்தைகளைத் தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்தவில்லை – உயர்நீதிமன்றத்தில் விஜய் தரப்பு விளக்கம்!
Local
27 August 2026
சுவிங்கம் பிரியரா நீங்கள் ? சைலிட்டால் இனிப்பூட்டி ஆபத்தானது தெரியுமா? இதயத்தைப் பதம் பார்க்கும் அதிர்ச்சித் தகவல்!
Local
27 August 2026
25 வருடங்களுக்கு பின்னர் பிரையன் லாராவின் சாதனையை முறியடித்த சொனால் தினுஷ
Local
27 August 2026
தமிழக சட்டமன்றத்தில் அனல் பறந்த விவாதம்! திமுக – தவெக உறுப்பினர்களிடையே கடும் கருத்து மோதல்
Local
27 August 2026
தொடரும் வெற்றி அலை : மமிதா பைஜூவுக்கு ஹட்ரிக் சாதனை – ஒரே ஆண்டில் மூன்று ரூ.100 கோடி வசூல் படங்கள்
Local
27 August 2026
நேபாளத்தில் வெள்ளப்பெருக்கு: உயிரிழப்புகள் 359 ஆக அதிகரிப்பு - 1,400 பேர் காணவில்லை
Local
27 August 2026
அதிகரிக்கும் வெப்பம் - வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!
Local
27 August 2026
மூளைக்குள் செயற்கை நுண்ணறிவின் மாயம் - பார்வையைத் திரும்பப் பெற்ற சாதனை அறுவை சிகிச்சை!
Local
27 August 2026