General28 August 2026

நேபாள பேரிடர் நிலவரம்: கூடாரங்கள் மற்றும் அவசர உபகரணங்களுடன் உதவிகளை வழங்கும் சர்வதேச அமைப்புகள்!

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக பல பகுதிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

வீடுகள், மக்களின் வாழ்வாதாரங்கள், வீதிகள் மற்றும் அத்தியாவசிய உட்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளதுடன், உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட பல குடும்பங்கள் பாதுகாப்பான தங்குமிடங்களைத் தேடி இடம்பெயர்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், அவசர உணவுப் பொருட்களை உலக உணவுத் திட்டம் ஏற்கனவே அனுப்பி வைத்துள்ளதுடன், தேவைகள் அதிகரிக்கும் பட்சத்தில் நிவாரண நடவடிக்கைகளை விரிவுபடுத்தத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும், தேசிய அதிகாரிகளுடன் இணைந்து நிவாரணப் பணிகளுக்கான போக்குவரத்து மற்றும் விநியோக நடவடிக்கைகளிலும் குழுக்கள் ஈடுபட்டுள்ளன.

இதன்படி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூடாரங்கள், அவசர மின்சார உற்பத்தி கருவிகள் மற்றும் மின்கலச் சேமிப்பு சாதனங்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
Related recommendation
Hiru TV News | Programmes