International29 August 2026

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி' மாநில ஆட்சியைப் பிடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை : முன்னாள் நிதியமைச்சர் கூற்று!

நாட்டின் கல்வி அமைப்புகளில் சீர்திருத்தங்களை வலியுறுத்திச் செயல்பட்டுவரும் 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி' அமைப்பு எதிர்காலத்தில் ஓரிரு மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

கரப்பான் பூச்சி கட்சி சார்பில் நாடு முழுவதும் பாடசாலைகளை ஆய்வு செய்யும் இயக்கம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
 
இந்தநிலையில், அசாம் மாணவர் சங்கப் போராட்டத்திற்குப் பின்னர் அசாம் கண பரிஷத் (AGP) கட்சி ஆட்சியைப் பிடித்ததையும், நேபாளத்தில் ஜென்-சி போராட்டத்தின் மூலம் ராஷ்ட்ரிய சுதந்திர கட்சியின் தலைவர் பாலேந்திர ஷா பிரதமரானதையும் சிதம்பரம் உதாரணமாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியாவில் இளைஞர்களால் உருவக்கப்பட்ட கரப்பான் பூச்சி அமைப்பு, தொடக்கத்தில் சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பைப் பதிவு செய்துவந்த நிலையில், பின்னர் களப் போராட்டங்களிலும் இறங்கியது.

குறிப்பாக நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய 37 நாள் தொடர் போராட்டம் தேசிய அளவில் பெரும் கவனத்தைப் பெற்றதுடன், அப்போதைய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகவும் காரணமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes