General30 August 2026

நீதியரசர்கள் நியமனமும் பேரணித் திட்டமும்: ஜனாதிபதியின் நகர்வுகள் குறித்து தயாசிறி கேள்வி!

செப்டம்பர் 5 ஆம் திகதி முதல் தொடர் மக்கள் பேரணிகளை நடத்த ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க எடுத்துள்ள தீர்மானம் குறித்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர கேள்வி எழுப்பியுள்ளார்.

இதன் மூலம் 22-வது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக பொதுவாக்கெடுப்பு (Referendum) நடத்தப்படக்கூடுமா என்ற பலத்த சந்தேகம் எழுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உயர்நீதிமன்றத்தில் தற்போது வெற்றிடங்களாக உள்ள நீதியரசர்களின்பணியிடங்களை நிரப்புவதற்குப் பல நீதியரசர்களை நியமிப்பது குறித்து ஜனாதிபதி பரிசீலிக்கலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes