பால் மா யோகட் மற்றும் பால் பானங்களின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்திகளை நுகர்வோர் விவகார அதிகாரசபை திட்டவட்டமாக மறுத்துள்ளது.
ஒரு கிலோகிராம் பால் மாவின் விலை 260 ரூபாயினாலும் யோகட் ஒன்றின் விலை 20 ரூபாயினாலும் பண்படுத்தப்பட்ட பால் பானம் ஒன்றின் விலை 40 ரூபாயினாலும் உயர்த்தப்பட்டுள்ளதாக "Breaking News" என்ற பெயரில் போலித் தகவல் ஒன்று பகிரப்பட்டு வருகின்றது.
எனினும் இந்த விலை அதிகரிப்பு தொடர்பான செய்திகள் முற்றிலும் பொய் என நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
"முக்கிய செய்தி (Breaking News) என்று குறிப்பிடப்படுவதனாலேயே ஒரு தகவல் உண்மையாகிவிடாது" என்றும் அதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தநிலையில், உத்தியோகபூர்வ மூலங்கள் மூலம் உறுதிப்படுத்தப்படாத தகவல்களைச் சமூக வலைத்தளங்களில் பகிர்வதைத் தவிர்க்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இத்தகைய போலிச் செய்திகள் நுகர்வோர் மத்தியில் தேவையற்ற அச்சத்தையும் சந்தையில் குழப்பத்தையும் ஏற்படுத்துவதாக அதிகாரசபை எச்சரித்துள்ளது.
அத்துடன் சந்தையில் சந்தேகத்திற்குரிய விலை மாற்றங்கள் அல்லது முறைகேடுகள் இடம்பெற்றால் அலுவலக நேரங்களில் 1977 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்குத் தொடர்பு கொண்டு முறைப்பாடு செய்யுமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை அறிவுறுத்தியுள்ளது.
Latest News
சமிந்த குலரத்னவின் முறைப்பாடு - கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் நாடாளுமன்ற அதிகாரிகள் முன்னிலை
Local
03 September 2026
கெஹெல்பத்தர பத்மேவின் விளக்கமறியல் நீடிப்பு
Local
03 September 2026
இணையப் பாதுகாப்பில் காத்திருக்கும் பேராபத்து: சமூக ஊடகங்களால் பாதிக்கப்படும் சிறுவர்கள் – 21 நாடுகளின் அதிர்ச்சி அறிக்கை!
Local
03 September 2026
கொளத்தூர் தொகுதி தேர்தல் வழக்கு: மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவை நிராகரித்தது சென்னை மேல்நீதிமன்றம்!
Local
03 September 2026
உடற்தகுதி பரிசோதனை இல்லாமலேயே இங்கிலாந்து தொடருக்கு குசல் மெண்டிஸ் தேர்வு செய்யப்பட்டாரா?
Local
03 September 2026
"குற்றம் செய்தவருக்கே அதன் தீவிரம் தெரியும்": நாமல் ராஜபக்ஷ குறித்து அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ கருத்து!
Local
03 September 2026
ஹோர்முஸ் நீரிணைக்கு 'ட்ரம்ப் நீரிணை' என பெயர் மாற்ற ட்ரம்ப் பரிந்துரை!
Local
03 September 2026
தண்டனையிலிருந்து விலகும் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் - மனித உரிமைகளை கண்காணிக்கும் அமைப்பு அரசாங்கத்திற்கு அழுத்தம்
Local
03 September 2026
ஊழல் தடுப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை ஆரம்பம்
Local
03 September 2026
அமெரிக்காவின் $1 நாணயத்தில் டொனால்ட் ட்ரம்பின் உருவம்: அதிகாரப்பூர்வமாகப் புழக்கத்திற்கு வந்தது!
Local
03 September 2026