General30 August 2026

நகை வாங்குவோருக்கு மீண்டும் ஒரு மகிழ்ச்சி செய்தி : சடாரென சரிந்த தங்க விலை!

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்களின் தாக்கத்தால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் இன்று (30) வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளன.

அதன்படி, ஒரு அவுண்ஸ் தங்கம் தற்போது 4,453.7 அமெரிக்க டொலருக்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேவேளை, ஒரு அவுண்ஸ் வெள்ளி 66.38 அமெரிக்க டொலராக விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த சில நாட்களாக இலங்கையின் உள்நாட்டு சந்தையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட நிலையில், சர்வதேச சந்தையில் பதிவாகியுள்ள விலை வீழ்ச்சியின் தாக்கம் இலங்கையிலும் எதிரொலிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால், எதிர்வரும் நாட்களில் உள்நாட்டு சந்தையிலும் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Related recommendation
Hiru TV News | Programmes