சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, "நீதிக்கான நீள் பயணம்" எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்புப் பேரணி ஒன்று இன்று (30) நடைபெற்றது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பங்கேற்புடன் இடம்பெற்ற இந்தப் பேரணி, யாழ்ப்பாணம் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு நினைவிடத்தில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தியதைத் தொடர்ந்து ஆரம்பமானது.
காணாமல் ஆக்கப்பட்டோரின் நிழற்படங்கள் தாங்கிய விசேட வாகனம் பேரணியின் முன்னிலையில் செல்ல, உறவினர்கள் தமது அன்புக்குரியவர்களின் நிழற்படங்களை ஏந்தியவாறு பேரணியில் பங்கேற்றனர்.
பல ஆண்டுகளாகக் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு உண்மை மற்றும் நீதி கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்திப் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் இதில் கலந்துகொண்டனர்.
உலகளவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான சம்பவங்கள் அதிகம் பதிவாகியுள்ள நாடுகளில் இலங்கையும் ஒன்றாகக் கருதப்படும் நிலையில், தமக்கான நீதி இன்னும் கிடைக்கப்பெறவில்லை என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இதன்போது சுட்டிக்காட்டினர்.
யாழ்ப்பாண நகரின் ஊடாகச் சென்ற பேரணி, தந்தை செல்வா கலையரங்கைச் சென்றடைந்தது. அதனைத் தொடர்ந்து அங்கு சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்ட மாநாட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின.

Latest News
பொரலஸ்கமுவவில் உந்துருளியில் வந்த இருவரால் துப்பாக்கிச் சூடு: ஒருவர் உயிரிழப்பு
Local
04 September 2026
நாளை முதல் அமுலுக்கு வரும் உள்நாட்டு டின் மீன்களுக்கான புதிய விலைகள்
Local
04 September 2026
பராக்கிரம சமுத்திரத்தின் நீர்மட்டம் குறைவு: வரலாற்றுச் சின்னம் வெளிப்பாடு!
Local
04 September 2026
தேயிலைத் தோட்டத்தில் பதற்றம்: சிறுத்தை தாக்கி தோட்டத் தொழிலாளி காயம்!
Local
04 September 2026
மின்னல் தாக்கம் அதிகரிப்பு: பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!
Local
04 September 2026
நள்ளிரவில் அழைத்து பாராட்டிய அஜித்: ஜி.வி. பிரகாஷ் நெகிழ்ச்சி!
Local
04 September 2026
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை
Local
04 September 2026
கொந்தளிக்கும் கடல் பிராந்தியங்கள்: கடற்றொழிலாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!
Local
04 September 2026
சிஎஸ்கே அணியின் பயிற்றுவிப்பாளராக சுரேஷ் ரெய்னா? வெளியான முக்கிய அறிவிப்பு
Local
04 September 2026
9 நாள் மரணப் போராட்டம்: சுரங்கப்பாதையிலிருந்து உயிருடன் மீட்கப்பட்ட தொழிலாளர்கள்!
Local
04 September 2026