அமெரிக்காவும் இஸ்ரேலுமே இஸ்லாமிய ஒற்றுமைக்கு "உண்மையான எதிரிகள்" என ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி தெரிவித்துள்ளார்.
இஸ்லாமிய நாடுகளின் தலைவர்கள் தங்களின் "உண்மையான எதிரியை" இனம் கண்டு, அதன் திட்டங்களைப் புரிந்து கொண்டு எதிர்க்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
"இஸ்லாமிய ஒற்றுமை வாரம்" குறித்த செய்தியை வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் மற்றும் பிற இஸ்லாமிய நாடுகளின் மக்களிடையே பிளவை ஏற்படுத்துவதற்காகப் பல்வேறு இன, கலாசார, சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் புவியியல் ரீதியான வேறுபாடுகளை அமெரிக்காவும் இஸ்ரேலும் சாக்குப்போக்குகளாகப் பயன்படுத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
அத்துடன், ஈரானியர்கள் தங்களுக்குள் எந்தவித வேறுபாடுகளையும் அனுமதிக்க வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
விரும்பத்தக்க மற்றும் ஆதிக்கம் செலுத்தும் இஸ்லாமிய நாகரிகத்தை அடைவதற்கு முஸ்லிம்களிடையே ஒற்றுமை அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வொஷிங்டனும் டெல் அவிவும் ஈரானின் எதிரிகள் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த இஸ்லாமிய உலகிற்கும் "உண்மையான எதிரிகள்" என்று அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த பெப்ரவரி மாத இறுதியில் அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரானின் மீது கூட்டுத் தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் பதற்ற நிலை அதிகரித்தது. இதனையடுத்து, அமெரிக்காவின் சொத்துக்கள் அமைந்துள்ள பிராந்திய நாடுகளின் மீது ஈரான் பதிலடித் தாக்குதல்களை நடத்தியது.
போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் கடந்த ஜூன் மாதம் ஈரானும் அமெரிக்காவும் 14 அம்ச புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட போதிலும், அந்த இடைக்கால ஒப்பந்தம் விரைவில் தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest News
தாய்லாந்து செல்லும் இலங்கையர்களுக்கான முக்கிய அறிவித்தல்
Local
07 September 2026
கேப் வெர்டெவின் போகோ தீவில் கோர விபத்து: பெரும்பாலான சிறுவர்கள் உட்பட்ட 25 பேர் பலி
Local
07 September 2026
மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்
Local
07 September 2026
பொதுப்பணத்தை தவறாக பயன்படுத்தியவர்கள் சிறை செல்வது நிச்சயம்- டில்வின் சில்வா எச்சரிக்கை
Local
07 September 2026
நிதிப் பற்றாக்குறையால் முடங்கிய சமூக சமையலறைகள்: காஸாவில் தீவிரப் பட்டினி!
Local
07 September 2026
ஒரே நாளில் இருவேறு விபத்துக்கள்: ஓடுதளத்தை விட்டு வெளியேறிய வானுார்தி: இடிபாடுகளில் சிக்கி மாணவர்கள் பலி!
Local
07 September 2026
60 குழந்தைகள் உட்பட 100 பாலஸ்தீனர்களின் எச்சங்களுக்கு இறுதிச்சடங்கு: உறைந்துபோன உறவினர்கள்!
Local
07 September 2026
பிஃபா தலைவர் தேர்தலில் மீண்டும் ஜியானி இன்ஃபான்டினோ போட்டி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
Local
07 September 2026
ஹோர்முஸ் நீரிணையில் வெடித்த போர்: அமெரிக்கா - ஈரான் இடையே தீவிரமடையும் பலப்பரீட்சை!
Local
07 September 2026
பனிப்பாறை சரிவால் கோரத் தாண்டவம்: 13-வது நாளாகத் தீவிரமடையும் தேடுதல் வேட்டை!
Local
07 September 2026