General31 August 2026

நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை பெய்வதற்கான சாத்தியம்

நாட்டில் மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

ஊவா மாகாணத்திலும் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களின் சில இடங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய பகுதிகளில் வரட்சியான காலநிலை நிலவும்.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடமத்திய, வடமேல் மாகாணத்திலும் மற்றும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை, மாத்தளை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின்போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்றின் காரணமாகப் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
Related recommendation
Hiru TV News | Programmes