General31 August 2026

உத்தேச 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம்: ஐ.நா. கேள்விகளுக்கு அரசு உரிய பதிலளிக்கவில்லை - அஜித் பி. பெரேரா குற்றச்சாட்டு

உத்தேச 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் குறித்து ஐக்கிய நாடுகளின் நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளின் சுதந்திரத்திற்கான சிறப்பு அறிக்கையாளர் எழுப்பிய 7 கேள்விகளுக்கு இலங்கை அரசு உரிய முறையில் பதிலளிக்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

அரசாங்கம், பெரும்பாலான முக்கியக் கேள்விகளுக்குத் தெளிவான விளக்கங்களை அளிக்கவில்லை

அத்துடன், முன்கூட்டியே கலந்தாலோசனைகள் நடத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் எதையும் அரசு சமர்ப்பிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உயர்நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதியரசர்களின் ஓய்வூதிய வயதை நீடிப்பதன் மூலம் நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளைக் குறைக்கலாம் என்ற அரசின் வாதத்தை எதிர்த்த அவர், நிலுவையில் உள்ள வழக்குகளில் சுமார் 95% மாவட்ட மற்றும் நீதவான் நீதிமன்றங்களிலேயே உள்ளன என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes