General01 September 2026

22 ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பான மனுக்கள் இன்று பரிசீலனைக்கு!

22 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராகவும் ஆதரவாகவும் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் இன்று உயர்நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

இதற்காகப் பிரதம நீதியரசர் ப்ரீத்தி பத்மன் சூரசேன தலைமையில், நீதியரசர்களான அச்சல வெங்கப்புலி, அர்ச்சுன ஒபேசேகர, சம்பத் அபேகோன் மற்றும் கிஹான் குலதுங்க ஆகியோர் அடங்கிய ஐவர் கொண்ட நீதியரசர்கள் ஆயம் நியமிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் 30 க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் பல்வேறு தொழிற்சங்கங்களும் இந்த சட்டமூலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

குறிப்பாக, நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது நீதித்துறையின் சுயாதீனத்துக்கு எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தொடர்பில் எழுந்துள்ள கேள்விகளால், இன்றைய உயர்நீதிமன்றத்தின் பரிசீலனை மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes