General01 September 2026

செப்டம்பர் 12 பேரணிக்கு அஞ்சி தன்னை சிறையில் அடைக்கத் திட்டம்: நாமல் ராஜபக்ச பகிரங்க குற்றச்சாட்டு!

செப்டம்பர் 12ஆம் திகதி அனுராதபுரத்தில் நடைபெறவுள்ள பேரணிக்கு பெருமளவான மக்கள் திரள்வார்கள் என அரசாங்கம் கருதினால், அதற்கு முன்னதாக தன்னை சிறையில் அடைக்கக்கூடும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அத்துடன், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்பாடு செய்து வரும் பேரணிகளுக்கு கிடைத்து வரும் அரசியல் ஆதரவுக்கு பதிலளிக்கும் வகையிலேயே, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் செப்டம்பர் 5ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் பேரணிகளை நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அந்தக் கட்சி அண்மையில் குற்றஞ்சாட்டியிருந்தது.

இதனையடுத்து கருத்து வெளியிட்ட நாமல் ராஜபக்ச, அரசாங்கம் எதிர்க்கட்சிகளின் குரல்களை ஒடுக்க முயற்சிப்பதாகவும், தனது பலவீனங்களை மறைப்பதற்காக இவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes