General02 September 2026

வறண்ட காலநிலை: 88 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

நாட்டின் நிலவும் வறண்ட காலநிலை காரணமாக 27,475 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 88,068 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.

ஆறு மாவட்டங்களில் உள்ள 28 பிரதேச செயலாளர் பிரிவுகள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்இ அதில் 27 பிரிவுகளில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருவதாகவும் அந்த மையம் குறிப்பிட்டுள்ளது.

இதன்படி அதிகளவானோருக்கு குடிநீர் விநியோகிக்கப்படும் மாவட்டமாக மொனராகலை விளங்குகிறது.

அங்கு 11751 குடும்பங்களைச் சேர்ந்த 37,890 பேருக்கு உதவி வழங்கப்பட்டு வருகிறது. மட்டக்களப்பில் 9547 குடும்பங்களைச் சேர்ந்த 28523 பேருக்குக் குடிநீர் வழங்கப்படுகிறது.

அத்துடன் அம்பாறை, பதுளை, பொலன்னறுவை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களிலும் 5750 குடும்பங்களைச் சேர்ந்த 14,955 பேருக்கு குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes