நாட்டின் சில பகுதிகளில் இன்று மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அதன்படி, சிலாபத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் தென்மேற்கு திசையிலிருந்து மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
அதேவேளை, காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகவும், காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகவும் காணப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் மாத்தறை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் கடல் அலைகள் 2.0 முதல் 2.5 மீற்றர் உயரம் வரை மேலெழும்பக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Latest News
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று எதிர்வரும் வாரத்தில் நாட்டிற்கு வருகை தரவுள்ளது
Local
04 September 2026
கொள்ளுப்பிட்டியில் தொடர்மாடி குடியிருப்பில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயம்; சந்தேக நபர் கைது!
Local
04 September 2026
அமெரிக்க நியூயோர்க் நகர் பாடசாலைகளில் எட்டாம் வகுப்பு வரை செயற்கை நுண்ணறிவுக்குத் தடை: புதிய தொழில்நுட்பக் கொள்கைகள் அறிவிப்பு
Local
04 September 2026
காஸாவில் ஏழை நோயாளிகளுக்காக சிகிச்சையளிக்க கூடார மருத்துவமனை!
Local
04 September 2026
மகளிர் ஆசிய கிண்ணம் : சதம் விளாசி வரலாற்று சாதனை படைத்த ஸ்மிருதி மந்தனா!
Local
04 September 2026
முத்தரப்பு இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் : நமீபியாவை வீழ்த்தி இறுதிப்போட்டி வாய்ப்பை தக்கவைத்தது ஸிம்பாப்வே!
Local
04 September 2026
ஆசிய விளையாட்டுப் போட்டி 2026: இந்தியக் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக V.V.S லக்ஷ்மண் நியமனம்
Local
04 September 2026
ராமாயணம்' திரைப்படத்தின் உலகளாவிய வெளியீட்டுத் திகதியை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது படக்குழு!
Local
04 September 2026
அமெரிக்காவிடம் போதிய அளவு ஆயுதம் கையிருப்பு உள்ளது:அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதி
Local
04 September 2026
பிரிக்ஸ் உச்சி மாநாடு: செப்டம்பர் 11 ஆம் திகதி டில்லியில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை!
Local
04 September 2026