General02 September 2026

சுரேஷ் சலேவின் உடல்நிலை குறித்து அறிக்கை சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் அரச புலனாய்வுச் சேவை பணிப்பாளரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவின் உடல்நிலை தொடர்பில் விரிவான அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு கொழும்பு தேசிய மருத்துவமனையின் பணிப்பாளருக்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அவரது தற்போதைய உடல்நிலை மற்றும் மேலதிக சிகிச்சை தேவையா என்பது தொடர்பான மருத்துவ அறிக்கையை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இந்தநிலையில், குறித்த வழக்கு விசாரணை எதிர்வரும் செப்டெம்பர் 15ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
Related recommendation
Hiru TV News | Programmes