General02 September 2026

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு : யாழ். மற்றும் குருநாகல் மாணவர்கள் முன்னிலை

2026 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.

இதன்படி, தமிழ் மொழி மூலம் நடைபெற்ற பரீட்சையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் 188 புள்ளிகளைப் பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அத்துடன், சிங்கள மொழி மூலம் நடைபெற்ற பரீட்சையில் அதிக்கூடிய புள்ளிகளாக குருநாகல் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் 193 புள்ளிகளைப் பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை மாணவர்களின் பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளங்கள் ஊடாக பார்வையிட முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes