General03 September 2026

இன்று நண்பகல் 12.09 மணிக்கு பின் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்!

இன்று (03) முதல் அடுத்த சில நாட்களில் நாட்டின் சில பகுதிகளில் பிற்பகல் வேளையில் மழை பெய்யக்கூடிய சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், ஊவா, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுகிறது.

எனவே, மின்னல் மற்றும் பலத்த காற்றினால் ஏற்படக்கூடிய விபத்துகளைத் தவிர்ப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சூரியன் உச்சம் கொடுக்கும் காலம்

இதேவேளை, சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வின் காரணமாக ஆகஸ்ட் 28 முதல் செப்டெம்பர் 07ஆம் திகதி வரை இலங்கைக்கு அண்மைய அட்சரேகைகளுக்கு நேர் மேலாக சூரியன் காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று (03) நண்பகல் 12.09 மணியளவில் மாதம்பே, தோரயாய, தொட்டகமுவ, ரத்தோட்ட மற்றும் களுவாஞ்சிகுடி ஆகிய பகுதிகளுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes