General03 September 2026

கொழும்பின் பல பகுதிகளில் இன்று 24 மணி நேர நீர் விநியோகம் தடை

கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (03) இரவு 8.00 மணி முதல் நாளை (04) இரவு 8.00 மணி வரை 24 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

இதற்கமைய, நுகேகொடை, கொஹுவளை, தெஹிவளை, கல்கிசை, இரத்மலானை, மொரட்டுவை, ராவத்தை, சொய்சாபுர, அங்குலானை, இந்திபெத்த, கட்டுபெத்த, கல்கெமுல்ல, கொடகாமுல்ல (Modara), கொரளவெல்ல, எகொடோயான மற்றும் கட்டுக்குருந்த ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு,செத்சிறிபாய, ஹிம்புடான, உடுமுல்ல வீதி, மாளிகாகொடெல்ல, வங்கி சந்தி வீதி, டபிள்யூ. ஏ. சில்வா மாவத்தை, ஹவ்லொக் வீதி, கல்யாணி வீதி, கொழும்பு 06, வைத்தியசாலை சுற்றவட்ட வீதி, ஜயந்தி மாவத்தை மற்றும் சாந்தி மாவத்தை ஆகிய பகுதிகளிலும் நீர் விநியோகம் தடைப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் காலப்பகுதியில் குறித்த பகுதிகளின் நுகர்வோர் அவசியமான நீரை முற்கூட்டியே சேமித்து வைத்துக் கொள்ளுமாறும், நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்
Related recommendation
Hiru TV News | Programmes