General03 September 2026

கொழும்பு மாநகர சபையின் முன்னாள் முதல்வர் ஏ.ஜே.எம். முசம்மிலின் மூத்த மகன் விடுதலை

பண மோசடி தொடர்பான சம்பவம் குறித்து கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கொழும்பு மாநகர சபையின் முன்னாள் முதல்வர் ஏ.ஜே.எம். முசம்மிலின் மூத்த மகனை, நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, ஆரம்பத்தில் எதிர்வரும் செப்டெம்பர் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டிருந்தார்.

எனினும், குறித்த சம்பவம் தொடர்பில் இரு தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில், அவரை விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், அவருக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டுப் பயணத் தடையையும் நீக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes