கலஹா, நில்லம்ப, குருகலே பகுதியில் புளியங்கொட்டை தொண்டையில் சிக்கியதில் 7 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று (02) மாலை தனது சகோதரிகளுடன் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்தபோது, சமையலறையில் இருந்த புளியை எடுத்து விளையாடியதாகவும், அப்போது புளியங்கொட்டை தொண்டையில் சிக்கியதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவத்தை அறிந்ததும், சிறுமியின் தாயாரும் உறவினர்களும் உடனடியாக செயற்பட்டு, சிறுமியை பேராதனை போதனா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
எனினும், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே சிறுமி உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சிறுமியின் உடலம் தற்போது பேராதனை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் கலஹா காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Latest News
பாகிஸ்தானிலிருந்து போதைப்பொருள் கடத்தல் : விசாரணைகளில் குளறுபடியா? - காவல்துறை சிறப்பு விசாரணை ஆரம்பம்!
Local
10 September 2026
காப்புரிமை உத்தரவை மீறியதாக இளையராஜா மீது வழக்கு – டெல்லி உயர்நீதிமன்றம் அறிக்கை!
Local
10 September 2026
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு இன்று இலங்கைக்கு வருகை
Local
10 September 2026
இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் இன்று நுவரெலியாவில்
Local
10 September 2026
பாணின் எடையை நுகர்வோருக்கு தெளிவாகக் காட்சிப்படுத்த வேண்டும் - நுகர்வோர் விவகார அதிகாரசபை
Local
10 September 2026
அடக்குமுறைகள் மூலம் எமது போராட்டத்தை நிறுத்த முடியாது - நாமல் எச்சரிக்கை
Local
10 September 2026
சூடான தேநீரால் புற்றுநோய் அபாயமா? - ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஆய்வு எச்சரிக்கை
Local
10 September 2026
சிறுவர்களை அச்சுறுத்தும் புற்றுநோய்: ஆண்டுதோறும் 1,000 குழந்தைகள் பாதிப்பு – வெளியான அதிர்ச்சித் தகவல்
Local
10 September 2026
கிடுகிடுவென உயரும் தங்க விலை : அதிர்ச்சியில் நகைப் பிரியர்கள்!
Local
10 September 2026
நாமலின் கைது அநியாயமும் அரசியல் பழிவாங்கலுமாகும் - சாகர காரியவசம் குற்றச்சாட்டு
Local
10 September 2026