ஹட்டன் - பொகவந்தலாவை, தெரேசியா தோட்டத்தில் சிறுத்தை தாக்கியதில் 56 வயது பெண் ஒருவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று நண்பகல் 12.35 மணியளவில் தெரேசியா தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
அதே தோட்டத்தைச் சேர்ந்த வேலு புஷ்பராணி என்ற 56 வயதுடைய தோட்டத் தொழிலாளியே சிறுத்தை தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
அவர் தேயிலைக் கொழுந்து பறித்துக்கொண்டிருந்தபோது, அந்தபகுதியில் பதுங்கியிருந்த சிறுத்தை திடீரென பாய்ந்து தாக்கியுள்ளது.
பெண்ணின் அலறல் சத்தத்தைக் கேட்ட அருகில் தேயிலைக் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த ஏனைய பெண் தொழிலாளர்கள் சத்தமிட்டதைத் தொடர்ந்து, சிறுத்தை அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.
இந்தநிலையில், சிறுத்தை தாக்குதலுக்கு உள்ளான பெண், சக தொழிலாளர்களின் உதவியுடன் பொகவந்தலாவ பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ காவல் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
Latest News
எல் நினோ வறண்ட வானிலை: 1.15 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு - குடிநீர் விநியோகம் தீவிரம்
Local
05 September 2026
விஜய்யை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தும் திட்டமா? - அமைச்சர் செங்கோட்டையன் பதில்
Local
05 September 2026
நாடுகளின் உண்மையான அளவைக் காட்டும் புதிய உலக வரைபடத் தீர்மானம் ஐ.நாவில் நிறைவேற்றம்
Local
05 September 2026
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளின் GOAT விராட் கோலி : கிளென் மெக்ஸ்வெல் புகழாரம்!
Local
05 September 2026
சீன பிரஜையின் மர்ம மரணம் - 43 நாட்களுக்குப் பின்னர் பிரதான சந்தேகநபர் கைது
Local
05 September 2026
தேநீர் மற்றும் பால் தேநீரின் விலை குறைப்பு
Local
05 September 2026
தோட்டத் தொழிலாளர்களின் துயரம்: முறையான வேலைவாய்ப்பின்றி காணப்படும் தலவாக்கலை மக்கள்!
Local
05 September 2026
வட்ஸ்அப்பில் நேரடியாகக் கட்டணம் செலுத்தும் வசதியை அறிமுகப்படுத்தியது இந்தியா!
Local
05 September 2026
கல்லூரி மாணவர் சேர்க்கையில் சாதி, மத விபரங்கள் கட்டாயமில்லை – தமிழக அரசு
Local
05 September 2026
நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை
Local
05 September 2026