கொழும்பு துறைமுக நகரப் பகுதியில் சீன பிரஜையொருவர் கடத்திச் செல்லப்பட்டு மர்மமான முறையில் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், பிரதான சந்தேகநபராகக் கருதப்படும் 54 வயதுடைய சீன பிரஜையொருவர் மாறுவேடத்தில் இருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினரால் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சந்தேகநபர் செயற்கை தலைமுடியை அணிந்து மாறுவேடத்தில் இருந்த நிலையில், சம்பவம் இடம்பெற்று 43 நாட்களுக்குப் பின்னர் கொழும்பு துறைமுக நகரப் பகுதியிலேயே கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் நான்கு சீன பிரஜைகள் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஹலியகொட காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட கரதன காவல் கண்காணிப்பு நிலைய அதிகாரிகள் குழுவொன்று, கடந்த ஜூலை 23ஆம் திகதி கெட்டஹெத்த பகுதியை நோக்கிய வீதிக்கு அருகிலுள்ள ரம்புட்டான் தோட்டமொன்றில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட வீட்டுக்குள் இருந்து ஒருவரின் உடலத்தை கண்டெடுத்திருந்தது.
குறித்த உடலம் கற்களால் மூடப்பட்டிருந்ததாகவும், சந்தேகத்திற்கிடமான சொகுசு சிற்றூந்து ஒன்றும் அன்றைய தினம் நுகதண்ட கோவில் அருகிலுள்ள வீதியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
முதற்கட்ட விசாரணைகளில் இது திட்டமிடப்பட்ட சம்பவமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டதுடன், உயிரிழந்தவர் சீன பிரஜை எனவும் அடையாளம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், குறித்த சீன பிரஜை கொழும்பு துறைமுக நகரப் பகுதியில் இருந்து கடத்திச் செல்லப்பட்டிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் வெளிநாடு செல்லும் நோக்கில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச வானூர்தி நிலையத்திற்குச் சென்றிருந்த இரு சீன பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், சம்பவத்துக்குப் பின்னர் சீகிரியா பகுதியில் உள்ள விடுதியொன்றில் தங்கியிருந்த மேலும் இரு சீன பிரஜைகள் கடந்த மாதம் 30ஆம் திகதி கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட 54 வயதுடைய பிரதான சந்தேகநபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி, தடுப்புக்காவல் உத்தரவைப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.
Latest News
மகிழ்ச்சியில் அஜித் ரசிகர்கள் - 'கிளாடியேட்டர்' முன்னோட்ட முன்பதிவில் வேகம்
Local
05 September 2026
எதிர்கால திட்டங்கள் அரசாங்கத்திடம் இல்லை: தேயிலை தொழிலை பாதுகாக்க திகாம்பரம் கூறும் ஆலோசனைகள்!
Local
05 September 2026
கொழும்பில் திடீர் சோதனை: தரம் குறைந்த 40 நீண்ட தூர பேருந்துகள் அடையாளம்!
Local
05 September 2026
மீண்டும் இணைந்த ரவிமோகன் மற்றும் கெனிஷா?: வைரலாக பரவும் காணொளி
Local
05 September 2026
ஈரானின் கார்க் தீவு அருகே எண்ணெய் தாங்கி கப்பல் மீது அமெரிக்க ஏவுகணைத் தாக்குதல்!
Local
05 September 2026
சட்டப்பேரவையில் தவெகவை தெறிக்கவிட்ட உதயநிதி ஸ்டாலின் – திங்கட்கிழமைக்காக காத்திருக்கும் அரசியல் களம்!
Local
05 September 2026
மலையகத் தொழிலாளர்களுக்கு கிடைக்கும் வேதனம் போதுமானதாக இல்லை: எம்.பி பழனி திகாம்பரம் குற்றச்சாட்டு
Local
05 September 2026
செப்.10க்கு முன்னர் சட்டவிரோத கரையோர கட்டடங்களை அகற்றுமாறு உத்தரவு
Local
05 September 2026
லண்டனில் இருந்து திரும்பியதும் முதலமைச்சர் விஜய் எடுக்கவுள்ள அதிரடி முடிவு : நடுங்கியது தமிழக அரசு!
Local
05 September 2026
பும்ராவுக்காக தேடப்படும் பதில் வீரர்: பிசிசிஐ-யின் உடற்தகுதி சோதனையும் சர்ச்சைகளும்!
Local
05 September 2026