General05 September 2026

வைபவ் சூர்யவன்ஷியுடன் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கப் போவது யார்? முன்னாள் இந்திய வீரர் அதிரடி யோசனை!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான எதிர்வரும் 20க்கு20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் விக்கெட் காப்பாளர் துடுப்பாட்ட வீரர் சஞ்சு சாம்சன் மீண்டும் இடம்பெற்றுள்ளார்.

முன்னதாக சிம்பாப்வே தொடரில் வாய்ப்பு கிடைக்காத நிலையில், சஞ்சு சாம்சன் இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், ஆப்கானிஸ்தான் தொடருக்கான அணியில் மீண்டும் இடம்பிடித்துள்ள அவர், தனது இடத்தை உறுதி செய்வதற்கான மற்றொரு வாய்ப்பைப் பெற்றுள்ளார்.

இதனிடையே, ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட 15 வயதான வைபவ் சூர்யவன்ஷியுடன் சஞ்சு சாம்சனை ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறக்கி சோதித்துப் பார்க்கலாம் என முன்னாள் இந்திய விக்கெட் காப்பாளர் ஆகாஷ் தாஸ்குப்தா தெரிவித்துள்ளார்.

வைபவ் சூர்யவன்ஷியும் சஞ்சு சாம்சனும் இதுவரை இணைந்து இன்னிங்ஸைத் தொடங்கியதில்லை. எனவே, இருவரையும் ஆரம்ப துடுப்பாட்டத்தில் களமிறக்குவது இந்திய அணிக்கு புதிய தொடக்க கூட்டணியை உருவாக்குவதற்கான வாய்ப்பாக அமையலாம் என அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes