இந்தியாவின் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை மற்றும் நிகழ்நேர டிஜிட்டல் பணப்பரிமாற்றங்களை(UPI) இலக்காகக் கொண்டு, வாட்ஸ்அப் தனது செயலியில் நேரடியாக கட்டணம் செலுத்தும் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் மூலம் பயனர்கள் வேறு செயலிகளுக்குச் செல்லாமல், வாட்ஸ்அப் செயலிக்குள் இருந்தே அன்றாட பயன்பாட்டுக்கான பல்வேறு கட்டணங்களை செலுத்த முடியும்.
இந்த புதிய சேவை இந்தியாவின் ‘பாரத் கனெக்ட்’ (Bharat Connect/BBPS) வலையமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.
இதன் ஊடாக மின்சாரம், நீர், எரிவாயு, FASTag, காப்பீடு, கடன் அட்டை மற்றும் கடன் தவணை உள்ளிட்ட 30 வகையான சேவைகளுக்கான 22,700 க்கும் அதிகமான கட்டண வழங்குநர்களிடம் பணம் செலுத்தும் வசதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த வசதியைப் பயன்படுத்த, வாட்ஸ்அப் செயலியின் முகப்புப் பக்கத்தில் உள்ள கட்டணம் செலுத்தும் பிரிவை அணுக முடியும். அங்கு ஏற்கனவே பயன்படுத்திய கட்டண விவரங்களைச் சேமித்துக்கொள்ளவும், ஒரே சேவை வழங்குநரின் கீழ் வீடு, அலுவலகம் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கான பல்வேறு கணக்குகளை நிர்வகிக்கவும் முடியும்.
மேலும், UPI, பற்று அட்டை (Debit card) மற்றும் (credit card) அட்டை உள்ளிட்ட பல்வேறு முறைகளில் பணம் செலுத்தும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மெட்டா இந்தியாவின் நிர்வாக இயக்குநரும் இந்தியப் பிரிவு தலைவருமான அருண் ஸ்ரீனிவாஸ் தெரிவிக்கையில், குறுஞ்செய்தி அனுப்புவது போன்று எளிதாக அன்றாட கட்டண செலுத்தும் வசதியை இந்திய மக்களுக்கு வழங்குவதே இதன் நோக்கம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த புதிய வசதி எதிர்வரும் சில வாரங்களில் Android மற்றும் iOS பயன்படுத்தும் பயனர்களுக்கு படிப்படியாக விரிவுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Latest News
சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த சீமான்: 'சேயோன்' படப்பிடிப்பில் திடீர் திருப்பம்!
Local
08 September 2026
ஜனாதிபதி ட்ரம்பின் அதிரடி லுக் சேஞ்ச்: சோஷியல் மீடியாவில் தீயாய் பரவும் நிழற்படங்கள்!
Local
08 September 2026
அத்துருகிரியவில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் காயம்
Local
08 September 2026
இலங்கையில் 600 புதிய குளிரூட்டப்பட்ட பேருந்துகள் இறக்குமதி: பயணிகள் போக்குவரத்தில் புதிய மறுமலர்ச்சி!
Local
08 September 2026
சட்டமன்ற உடல்மொழி சர்ச்சை குறித்து முதலமைச்சர் விஜய் விளக்கம்
Local
08 September 2026
சட்டவிரோத நடவடிக்கைகளால் பறிபோன சலுகை: தாய்லாந்துக்கான இலவச விசா வசதி திடீர் ரத்து!
Local
08 September 2026
உள்நாட்டு பொறிமுறையிலேயே பொறுப்புகூறலில் நிலையான முன்னேற்றம் ஏற்படும் - ஜெனீவாவில் இலங்கை வலியுறுத்து!
Local
08 September 2026
ஈபிள் கோபுரம் தற்காலிகமாக மூடல் : பாரிஸில் பரபரப்பு!
Local
08 September 2026
உலக நாடுகளின் பார்வையை ஈர்த்த வட கொரியா - ரஷ்யா இணைப்புப் பாலம் திறப்பு!
Local
08 September 2026
இமயம் பாரதிராஜாவின் இறுதித் திரைப்பயணம்... 'புலவர்' சிறு முன்னோட்டம் வெளியீடு!
Local
08 September 2026