மலையகத் தொழிலாளர்களுக்கு தற்போது கிடைக்கும் வேதனம், அவர்களின் நாளாந்த வாழ்க்கையைக் கொண்டு செல்வதற்குப் போதுமானதாக இல்லை என முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
சூரியனின் விழுதுகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இந்த வேதனப் பிரச்சினை நீண்ட காலமாகத் தீர்க்கப்படாமல் உள்ளதாகவும், அரசாங்கம் ஒரு நாளைக்கு 200 ரூபாயும், நிறுவனங்கள் 200 ரூபாயும் சேர்த்து 400 ரூபாயையும் தருவதாகக் கூறினாலும், அரசாங்கம் மாறும்போது இந்தத் தொகை முறையாகக் கிடைக்கும் என்பதில் உறுதியற்ற தன்மை நிலவுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தச் சிக்கல்களைத் தீர்ப்பதற்குத் தோட்டங்களைப் பிரித்துக் கொடுத்து, சிறு தோட்ட உரிமையாளர் முறையைக் கொண்டுவர வேண்டும் அல்லது குத்தகைக்கு வழங்கி கொழுந்துப் பறிப்புக் கூலியை உயர்த்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
ஆனால், அரசியல்வாதிகள் தேர்தலில் வெற்றி பெறுவதற்காகப் பொய் வாக்குறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்றி வருவதாகவும், தேர்தல் முடிந்ததும் தோட்டத் தொழிலாளர்களை மறந்துவிடுவதாகவும் முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
Latest News
“நாமலின் கைது அரசியல் பழிவாங்கல் - செப்.12 கூட்டத்தை தடுக்க முடியாது”
Local
05 September 2026
அமெரிக்காவில் பெட்ரோல் விலை வரலாறு காணாத அளவில் உயர்வு!
Local
05 September 2026
நேபாள அனர்த்தம்: 10 நாட்களாக சுரங்கத்துக்குள் சிக்கியிருந்த சீனர் உயிருடன் மீட்பு
Local
05 September 2026
பாடசாலை சின்னங்களைப் பயன்படுத்தும் நிகழ்வுகளில் மது மற்றும் போதைப்பொருட்களுக்குத் தடை!
Local
05 September 2026
மலையேற்ற வீரர்களின் சிறுநீரும் எவரெஸ்ட் பனிப்பாறை உருகுவதற்கு ஒரு காரணமாம்!
Local
05 September 2026
யு.எஸ். ஓபன் டென்னிஸ்: மீண்டும் இணைந்த வீனஸ் - செரீனா வில்லியம்ஸ் ஜோடி!
Local
05 September 2026
ஈரான் மோதல் ஒரு பெரிய விடயமே அல்ல : அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கருத்து!
Local
05 September 2026
முச்சக்கர வண்டி ஓட்டுவதற்கான குறைந்தபட்ச வயது எல்லையை 25 - 35 க்கு இடைப்பட்டதாக திருத்த கோரிக்கை!
Local
05 September 2026
La Liga கால்பந்து தொடர்: ரியல் மெட்ரிட் அணியை வீழ்த்தி அசத்திய ரியல் பெட்டீஸ்!
Local
05 September 2026
தலைமன்னார் கடலில் மணல் திட்டில் தவித்த 8 பேர் கடற்படையினரால் மீட்பு!
Local
05 September 2026