போதைப்பொருள் கடத்தல் மற்றும் சட்டவிரோத ஆயுதப் பயன்பாடு தொடர்பான வழக்கில், எகிப்தின் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் சாரா கலீஃபா (Sarah Khalifa) உட்பட 11 பேருக்கு மரணத் தண்டனை விதித்து எகிப்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
எகிப்தின் அரச ஊடகமான 'அல்-அஹ்ராம்' தகவலின்படி, போதைப்பொருள் தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை இறக்குமதி செய்து விற்பனை செய்த குற்றவியல் கும்பலுடன் இணைந்து செயல்பட்டமை மற்றும் சட்டவிரோதமாக ஆயுதங்களை வைத்திருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
'மிஷன் இம்போசிபிள்' என்ற குற்றவியல் சார்ந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த 39 வயதான சாரா கலீஃபா, தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.
இந்த வழக்கில் மேலும் 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதோடு, 7 பேர் விடுவிக்கப்பட்டும் உள்ளனர்.
முன்னதாக கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட தீர்ப்பு, எகிப்திய சட்டப்படி நாட்டின் தலைமை மதகுருவின் (Grand Mufti) ஆலோசனைப் பெறப்பட்ட பின்னரே அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
வழக்கின் விசாரணையின் போது, சந்தேகநபர்களிடமிருந்து 750 கிலோகிராமுக்கும் அதிகமான போதைப்பொருட்களும், அவற்றை தயாரிப்பதற்கான மூலப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இலத்திரனியல் சான்றுகள் மற்றும் 20 சாட்சியாளர்களின் வாக்குமூலங்களின் அடிப்படையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், சாரா கலீஃபாவின் சார்பில் இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்யவுள்ளதாக அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

Latest News
அயல்நாடுகளை எப்போதுமே மாற்ற முடியாது - இந்திய அமைச்சர் கொழும்பில் கருத்து
Local
09 September 2026
கொழும்பில் முன்னிலைப் போதைப்பொருள் கடத்தல்காரரின் முக்கிய நண்பர்கள் 4 பேர் கைது!
Local
09 September 2026
ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டத்தில் ஜனாதிபதி பங்கேற்க மாட்டார்
Local
09 September 2026
பெலன் டோர் (Ballon d'Or) விருதுக்கான ஆண்இ பெண் வீர வீராங்கனைகள் பரிந்துரை
Local
09 September 2026
ஈரானின் ஐந்து கப்பல்களை அழித்ததாக கூறும் அமெரிக்கா
Local
09 September 2026
10 ரஷ்ய தூதர அதிகாரிகளை வெளியேற்றியது ஹங்கேரி
Local
09 September 2026
ட்ரம்பும்-புடினும் தொலைபேசியில் கலந்துரையாடியுள்ளனர்
Local
09 September 2026
சிங்கப்பூர் பிரதமருக்கு $1 மில்லியன் வேதன உயர்வு: தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை வழங்க தீர்மானம்!
Local
09 September 2026
சேலத்தில் ‘TVK’ முழக்கம்: மேடையில் தம்பஸ்-அப் காட்டி அசத்திய ஜேசன் சஞ்சய்!
Local
09 September 2026
பிரித்தானியாவின் பிரதான வானூர்தி நிலையங்களில் தொழில்நுட்ப பிரச்சினையால் நூற்றுக்கணக்கான வானூர்தி சேவைகள் பாதிப்பு
Local
09 September 2026