கொலை வழக்கில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட பின்னர், மேன்முறையீட்டின் அடிப்படையில் நிரபராதியாக விடுதலை செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர, உயர்நீதிமன்றத்தினால் வெளிநாட்டுப் பயணத்தடை விதிக்கப்படுவதற்கு முன்னரே இலங்கையை விட்டு வெளியேறியுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்கள தகவல்கள் தெரிவித்துள்ளன.
அதன்படி, முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர கடந்த ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதியே இலங்கையிலிருந்து வெளிநாடு சென்றுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு நபரொருவர் மரணிக்க வழிவகுத்த குற்றச்சாட்டில், பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவருக்கு இரத்தினபுரி மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
எனினும், மேல் நீதிமன்றத்தின் தண்டனைக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட மேன்முறையீட்டை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், அவர்கள் மூவரையும் நிரபராதிகளாக அறிவித்து விடுதலை செய்ய உத்தரவிட்டது.
இதனையடுத்து, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை வலுவிழக்கச் செய்யக் கோரி பாதிக்கப்பட்ட தரப்பினரால் உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்தநிலையில், பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன, நீதியரசர்களான அசல வெங்கப்புலி மற்றும் கிஹான் குலதுங்க ஆகியோரைக் கொண்ட மூவர் அடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனு அண்மையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளும் வெளிநாடு செல்வதற்குத் தடை விதித்து உத்தரவிடப்பட்டது.
அத்துடன், இந்த உத்தரவை குடிவரவு குடியகல்வுக்கட்டுப்பாட்டாளருக்கு அறிவிக்குமாறும், வழக்கு தொடர்பான அறிவித்தலை பிரதிவாதிகளுக்கு அனுப்பி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவை அமுல்படுத்த முற்பட்ட போதே, பிரேமலால் ஜயசேகர கடந்த ஆகஸ்ட் 31 ஆம் திகதியே வெளிநாட்டுக்கு சென்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
எனினும், அவர் மீண்டும் இலங்கைக்குத் திரும்புவதற்கான விமான பயணச்சீட்டையும் முன்பதிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Latest News
டிட்வா சூறாவளியால் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கான வீட்டு வாடகை கொடுப்பனவு டிசம்பர் 31 வரை நீடிப்பு
Local
09 September 2026
2030-க்குள் மனிதகுலத்திற்கு பேராபத்தா? – AI நிறுவனத்தின் ஆய்வாளர் திடீர் ராஜினாமாவின் பின் விடுத்த பகீர் எச்சரிக்கை!
Local
09 September 2026
இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை போதைப்பொருள் கடத்தல்காரர்கள்: ஜனாதிபதி விடுத்த கோரிக்கை
Local
09 September 2026
மேலதிக விசாரணைகளுக்காக மேல் மாகாண வடக்கு குற்றத் தடுப்பு பிரிவுக்கு அழைத்து செல்லப்பட்ட “கொண்ட ரஞ்சித்”!
Local
09 September 2026
மாற்றுத்திறனாளிகளுக்காக ATM இயந்திரங்களில் புதிய வசதி!
Local
09 September 2026
விளக்கம் அளித்தும் ஓயாத சர்ச்சை: சட்டமன்ற மரபுகளை மீறிவிட்டாரா முதலமைச்சர் விஜய்? - பதவியை கேள்விக்குள்ளாக்கிய திமுக!
Local
09 September 2026
சுகீஸ்வர பண்டார எதிர்வரும் 23 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில்
Local
09 September 2026
சிறுவர்களின் உடல்ரீதியான தொடுகை: சம்மதத்திற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என மருத்துவர் துஷாரா விக்ரமநாயக்க வலியுறுத்தல்
Local
09 September 2026
"சிக்மா படத்திற்கு விஜய் சேரின் ஆதரவு மிகப்பெரிய அடையாளம்" – சிலிர்க்க வைக்கும் சந்தீப் கிஷன் பேச்சு!
Local
09 September 2026
இந்திய பாதுகாப்பு அமைச்சரின் பயணத்தின் எதிரொலி - கொழும்பு வந்தடைந்தது 'ஐ.என்.எஸ் உதயகிரி' போர்க்கப்பல்
Local
09 September 2026