நாட்டில் நிலவும் கடும் வறட்சியான வானிலை காரணமாக, அம்பாறை மாவட்டத்திலுள்ள 9 பிரதான பாசன நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 21.5 சதவீதமாகக் குறைவடைந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் (06) தெரிவித்துள்ளது.
இந்தத் திடீர் நீர்மட்ட வீழ்ச்சியால், மாவட்டத்தில் விவசாயம் மற்றும் ஏனைய அத்தியாவசிய தேவைகளுக்கான நீர் விநியோகம் தொடர்பில் கடும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 4 பிரதான பாசன நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் 25.3 சதவீதம் வரை குறைவடைந்துள்ளது.
இது கிழக்கு மாகாணத்தில் நீடித்து வரும் கடும் வறட்சியின் தீவிரத்தைப் பிரதிபலிக்கிறது.
தொடர்ந்து நிலவும் வறட்சியான வானிலையால் பல மாவட்டங்களில் நீர்வளமும் விவசாயமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
இன்று பொலன்னறுவை மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில பகுதிகளில் மழை பெய்து தற்காலிக நிவாரணம் கிடைத்தபோதிலும், வெப்பமான வறண்ட வானிலை எதிர்வரும் வாரம் முழுவதும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வறட்சியால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மொனராகலையும் ஒன்றாகும்.
அங்குள்ள ஏராளமான சிறிய பாசனக் குளங்கள் ஏற்கனவே முற்றிலும் வற்றிப்போயுள்ளன.
குடிநீர் தட்டுப்பாட்டிற்குத் தீர்வு காணும் வகையில், மொனராகலை - சீயம்பலாண்டுவை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட 48 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் உள்ள குழாய் கிணறுகளைத் திருத்தும் பணிகளை, சீயம்பலாண்டுவை பிரதேச சபையும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையும் இணைந்து ஆரம்பித்துள்ளன.
Latest News
துபாயில் இருந்து அழைத்து வரப்பட்ட 'கொண்ட ரஞ்சித்' கைது: குற்றப்புலனாய்வுத் திணைக்களம் அதிரடி!
Local
09 September 2026
மின்னல் மற்றும் பலத்த காற்று எச்சரிக்கை : பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவுறுத்தல்!
Local
09 September 2026
அயல்நாடுகளை எப்போதுமே மாற்ற முடியாது - இந்திய அமைச்சர் கொழும்பில் கருத்து
Local
09 September 2026
கொழும்பில் முன்னிலைப் போதைப்பொருள் கடத்தல்காரரின் முக்கிய நண்பர்கள் 4 பேர் கைது!
Local
09 September 2026
ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டத்தில் ஜனாதிபதி பங்கேற்க மாட்டார்
Local
09 September 2026
பெலன் டோர் (Ballon d'Or) விருதுக்கான ஆண்இ பெண் வீர வீராங்கனைகள் பரிந்துரை
Local
09 September 2026
ஈரானின் ஐந்து கப்பல்களை அழித்ததாக கூறும் அமெரிக்கா
Local
09 September 2026
10 ரஷ்ய தூதர அதிகாரிகளை வெளியேற்றியது ஹங்கேரி
Local
09 September 2026
ட்ரம்பும்-புடினும் தொலைபேசியில் கலந்துரையாடியுள்ளனர்
Local
09 September 2026
சிங்கப்பூர் பிரதமருக்கு $1 மில்லியன் வேதன உயர்வு: தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை வழங்க தீர்மானம்!
Local
09 September 2026