விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, இன்று (8) நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் வழங்கியுள்ள அனுமதியின் அடிப்படையில், அவர் நாடாளுமன்றத்துக்கு அழைத்து வரப்படுவார் என சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும், சிறைச்சாலைகள் ஆணையாளருமான சேனக்க பல்லேதன்ன தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பதற்கு அனுமதி வழங்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் ஊடாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்திருந்தது.
இந்த கோரிக்கைக்கு அமைய அவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனிடையே, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் குடும்ப உறவினர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய, அவருக்கு வீட்டிலிருந்து கொண்டுவரப்படும் உணவை உட்கொள்வதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, விளக்கமறியலில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் நலன் விசாரிப்பதற்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ ஆகியோர் நேற்று விளக்கமறியல் சிறைச்சாலைக்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest News
AI நிழற்படங்கள் குறித்து அதிருப்தி: கிளியான் எம்பாப்பே கவலை!
Local
12 September 2026
செங்கடல் நுழைவாயிலைக் கைப்பற்றிய ஹவுதிகள்: சவூதி எண்ணெய் குழாய்ப் பாதை தற்காலிகமாக மூடல்!
Local
12 September 2026
2030 உலகக் கிண்ண இறுதிப்போட்டி: மொரோக்கோவின் உரிமைக்கோரலுக்கு ஃபீஃபா மறுப்பு
Local
12 September 2026
ஜனாதிபதி தலைமையில் பொலன்னறுவையில் இன்று பிரம்மாண்ட மக்கள் பேரணி!
Local
12 September 2026
அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் உணவு தவிர்ப்பு போராட்டம்
Local
12 September 2026
தலைமன்னார் பகுதியில் தவித்துக் கொண்டிருந்த இளைஞரை மீட்ட இலங்கை கடற்படையினர்
Local
12 September 2026
லண்டனில் இரு துருவங்கள் - பல கோடி மக்களின் எதிர்பார்ப்பு: சில்வர்ஸ்டோன் பந்தயத்தைத் தொடங்கி வைக்கிறார் விஜய்!
Local
12 September 2026
அநுராதபுரத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் "ஜனசதன" பேரணி
Local
12 September 2026
டொனால்ட் ட்ரம்பின் வருகை: அயர்லாந்தில் மேற்கொள்ளப்படும் மிகப்பாரிய பாதுகாப்பு நடவடிக்கைகள்
Local
12 September 2026
மூன்றாவது போட்டியிலும் வெல்லுமா இங்கிலாந்து ?
Local
12 September 2026