இறுதிப்போரில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகத் தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில், தன் மீதான குறிப்பிட்ட குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கத் தயாராக இருப்பதாகவும், சர்வதேச அளவில் தன் மீது விதிக்கப்பட்ட தடைகளுக்கான அடிப்படை குறித்து கேள்வி எழுப்பியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கைப் பாதுகாப்பு படையினர் புலிகளுக்கு எதிராகத் தொழில்முறை ரீதியிலேயே போரிட்டனர் என்றும், இறுதி இராணுவ நடவடிக்கையின் போது பொதுமக்கள் உயிரிழப்புகளைக் குறைக்கப் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
2020 ஆம் ஆண்டு அமெரிக்காவும், 2025 ஆம் ஆண்டில் பிரித்தானியாவும் தன் மீது விதித்துள்ள தடைகளுக்கான காரணங்களை தொடர்ந்து கேட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், தான் ஒரு போர்க் குற்றவாளி அல்ல என்றும் தாய்நாட்டுக்காகவே போரிட்டதாகவும் தெரிவித்தார்.
இராணுவத்தினர் வேண்டுமென்றே பொதுமக்களை இலக்கு வைக்கவில்லை எனக் கூறிய சவேந்திர சில்வா, போரின் போது பொதுமக்கள் உயிரிழந்திருக்கலாம் என்றும், ஆனால் அவை திட்டமிட்டுச் செய்யப்பட்டவை அல்ல என்றும் விளக்கமளித்தார்.
2009 ஆம் ஆண்டு போரின் இறுதிக் கட்டத்தில் தனது 58 ஆவது படைப்பிரிவு 123,000 க்கும் அதிகமான பொதுமக்களை மீட்டதாகவும், சரணடைந்த சுமார் 12,000 புலிகள் உறுப்பினர்களில் 75 சதவீதத்துக்கும் அதிகமானோர் தனது படைப்பிரிவிடமே சரணடைந்ததாகவும் குறிப்பிட்டார்.
அவ்வாறு சரணடைந்தவர்கள் பின்னர் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டு சமூகத்தில் இணைக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
புலிகளின் வட பிராந்திய சிரேஷ்ட தளபதி ஒருவர் சிவில் உடையில் ஆயுதத்துடன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டதை சுட்டிக்காட்டிய அவர், சீருடை அணியாத போராளிகள் கொல்லப்படும் போது அவர்கள் பொதுமக்களாகக் கணக்கிடப்படும் சூழல் நிலவுவதாகக் கூறினார்.
மேலும், புலிகள் பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தியதாகவும் சாடினார்.
அடுத்தடுத்து வந்த இலங்கை அரசாங்கங்கள் சர்வதேச ரீதியில் இராணுவத்தின் பக்க நியாயங்களை சரியாக முன்வைக்கத் தவறியதே தன் மீதான குற்றச்சாட்டுகள் சர்வதேச அளவில் வலுப்பெறக் காரணம் என அவர் விமர்சித்தார்.
குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்துடன் கூடிய ஆதாரங்களுடன் நேரடியாக விவாதத்துக்கு வருமாறு சர்வதேச அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்த அவர், தவறு நடந்திருந்தால் அதை ஏற்றுக்கொள்ளத் தயார் என்றும் தெரிவித்தார்.
மேலும், புலிகள் ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்றும், தமிழ் மக்களின் குறைகளுக்கு அரசியல் ரீதியாகவே தீர்வு காணப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Latest News
லண்டனில் நடிகர் அஜித் பங்கேற்கும் சிற்றூந்து பந்தயத்தை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் விஜய்!
Local
11 September 2026
மகளிர் ஆசியக் கிண்ணம் : 10 ஆவது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இந்திய மகளிர் அணி!
Local
11 September 2026
மத்திய கிழக்கில் நிலவும் அமைதியற்ற சூழலால் உலகளாவிய எண்ணெய் விலை உயர்வு!
Local
10 September 2026
மருத்துவப் பரிந்துரையின்றி மயக்க மாத்திரைகளை விநியோகித்த “பெத்தி அக்கா” கைது!
Local
10 September 2026
கல்வித்துறையில் அதிரடி மாற்றம்: GPA முறைக்கு பதிலாக அறிமுகமாகிறது புதிய 'Weighted Average Marks' முறை!
Local
10 September 2026
கல்வி முறையில் அதிரடி மாற்றம்: சாதாரண தரப் பரீட்சை 7 பாடங்களாக மட்டுப்படுத்த பரிந்துரை
Local
10 September 2026
இந்திய பாதுகாப்பு அமைச்சருடன் செந்தில் தொண்டமான் சந்திப்பு
Local
10 September 2026
அதிரடி திட்டங்களுடன் லண்டன் செல்லும் முதலமைச்சர் – விஜய் பயணிக்கும் பயணிகள் வானூர்தியில் இத்தனை வசதிகளா?
Local
10 September 2026
சர்ச்சைகுள்ளான பாராட்டும் - சூர்யாவை பழிதீர்த்தாரா? விவாதப் பொருளான சிவகார்த்திகேயனின் வாழ்த்து
Local
10 September 2026
ஸூக்கார் தீவின் கட்டுப்பாட்டை முழுமையாகக் கைப்பற்றிய ஹூதி கிளர்ச்சியாளர்கள்
Local
10 September 2026