சீனாவில் கடந்த மாதம் நடைபெற்ற உலக மனிதவடிவ ரோபோ விளையாட்டுப் போட்டிகளுக்குப் பின்னர், இந்த ரோபோக்களை இராணுவப் பயிற்சி தளங்களிலும், போர்க்களங்களிலும் பயன்படுத்தும் ஆய்வுகளைச் சீனா தீவிரப்படுத்தியுள்ளது.
சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் (PLA) அதிகாரப்பூர்வ செய்தித்தாளான 'PLA டெய்லி', ஆய்வகங்களில் உள்ள அதிநவீன தொழில்நுட்பங்களை இராணுவ பயன்பாட்டுக்கு விரைந்து மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
உலகளவில் உற்பத்தியாகும் மனிதவடிவ ரோபோக்களில் சுமார் 95 சதவீதத்தை சீன நிறுவனங்களே தயாரிக்கின்றன.
இந்த வணிக ஆதிக்கத்தை இராணுவப் பயன்பாட்டிற்கும் சீனா பயன்படுத்தி வருகிறது.
ஏற்கனவே, கட்டடங்கள், சுரங்கங்கள் மற்றும் கப்பல்களுக்குள் எதிரிகளை எதிர்கொள்ளும் வகையில், மனித வீரர்களுடன் இணைந்து செயல்படும் 'போர்க்கள ரோபோக்களை' (Combat Robots) உருவாக்கும் திட்டங்களை சீன இராணுவ ஆய்வாளர்கள் வடிவமைத்துள்ளனர்.
இந்தநிலையில், நொரின் கோ (Norinco) என்ற அரசுடமை பாதுகாப்பு நிறுவனம் உருவாக்கியுள்ள 'புசி' (Fuxi) போன்ற ரோபோக்கள், மனிதர்களின் தொலைதூரக் கட்டுப்பாட்டு மூலம் (teleoperation system) கண்காணிப்பு பணி மற்றும் ஆபத்தான பணிகளைச் செய்யக்கூடியவையாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
அமெரிக்க இராணுவமும் கடந்த ஆண்டு இதுபோன்ற 'இராணுவ மனிதவடிவ ரோபோ' (militarized humanoid capabilities) திட்டங்களுக்கான போட்டிகளைத் தொடங்கியுள்ளது.
இருப்பினும், ரோபோ தயாரிப்பில் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பாரிய இடைவெளி உள்ளது.
Latest News
பல்கலைக்கழக மாணவர் தெரிவு நிறைவு – பதிவு செய்வதற்கான இறுதித் திகதி அறிவிப்பு
Local
10 September 2026
முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் - பிணையில் செல்வதற்கு உத்தரவு
Local
10 September 2026
சினிமாவை மிஞ்சிய நிஜ வாழ்க்கை நாடகம் : ரவி மோகனை விளாசிய ஆர்த்தியின் இன்ஸ்டா பதிவு!
Local
10 September 2026
பிற்பகல் 2 மணிக்குப் பின் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம் : பொதுமக்கள் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தல்!
Local
10 September 2026
தந்தி வழிப் பணப் பரிமாற்றம்: அமெரிக்க டொலர்ளை வெளிநாடுகளுக்கு அனுப்பியவர் மருதானையில் கைது
Local
10 September 2026
"இன்றைக்கும் தழும்புகள் இருக்கு..." : சட்டப்பேரவைச் சர்ச்சைக்கு மு.க.ஸ்டாலின் விளக்கம்!
Local
10 September 2026
பொலன்னறுவையில் கோர விபத்து : கால்வாயில் கவிழ்ந்த பேருந்து - 20 பேர் மருத்துவமனையில் அனுமதி!
Local
10 September 2026
நாடலி ஹார்ப் உள்ளிட்ட நெருக்கமான உதவியாளர்களுக்கு பணப்பரிசு வழங்கிய டொனால்ட் ட்ரம்ப்
Local
10 September 2026
மத்திய கிழக்கில் தற்போது என்ன நடக்கிறது? - 3 நிமிடங்களில் சுருக்கமாக!
Local
10 September 2026
களுபோவில வீடொன்றின் மீது கைக்குண்டு வீச்சு!
Local
10 September 2026