வட மாகாண பாடசாலைகளில் 170 தகவல் தொழில்நுட்ப (ICT) ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாக நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது மொத்த ICT ஆசிரியர் பணியிடங்களில் சுமார் 31 சதவீத வெற்றிடமாக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக தீவகம், தென்மராட்சி மற்றும் மடு ஆகிய கல்வி வலயங்களில் 40 சதவீதத்துக்கும் அதிகமான ICT ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ICT ஆசிரியர் வெற்றிடங்கள் காரணமாக, பாடசாலைகளில் பழுதடையும் கணினிகள், ஸ்மார்ட் பலகைகள் மற்றும் மடிக்கணினிகளைப் பழுதுபார்ப்பதிலும், அவற்றுக்கான தொழில்நுட்ப மதிப்பீட்டு அறிக்கைகளை வழங்குவதிலும் பெருமளவு தாமதம் ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்குப் பதிலளித்த பிரதமர் ஹரிணி அமரசூரிய, பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிவர்த்தி செய்வதற்காக 23,000 ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான பரீட்சைகள் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், நடப்பு ஆண்டுக்குள் ஆசிரியர் வெற்றிடங்களில் 50 சதவீதத்தை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் உறுதியளித்துள்ளார்.
இதனிடையே, பாடசாலைகளில் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள மின்னணு சாதனங்களை எரிப்பது அல்லது மண்ணில் புதைப்பது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், அவற்றை முறையாக மறுசுழற்சி செய்வதற்கான நடைமுறையை அறிமுகப்படுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்குப் பதிலளித்த பிரதமர், மின்னணுக் கழிவுகளைப் பாதுகாப்பான முறையில் அகற்றுவதற்கான தெளிவான நடைமுறைகள் உருவாக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், டிஜிட்டல் பொருளாதார அமைச்சுடன் இணைந்து கல்வித்துறைக்கான புதிய வழிகாட்டுதல்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
Latest News
மாற்றுத்திறனாளிகளுக்காக ATM இயந்திரங்களில் புதிய வசதி!
Local
09 September 2026
விளக்கம் அளித்தும் ஓயாத சர்ச்சை: சட்டமன்ற மரபுகளை மீறிவிட்டாரா முதலமைச்சர் விஜய்? - பதவியை கேள்விக்குள்ளாக்கிய திமுக!
Local
09 September 2026
சுகீஸ்வர பண்டார எதிர்வரும் 23 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில்
Local
09 September 2026
சிறுவர்களின் உடல்ரீதியான தொடுகை: சம்மதத்திற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என மருத்துவர் துஷாரா விக்ரமநாயக்க வலியுறுத்தல்
Local
09 September 2026
"சிக்மா படத்திற்கு விஜய் சேரின் ஆதரவு மிகப்பெரிய அடையாளம்" – சிலிர்க்க வைக்கும் சந்தீப் கிஷன் பேச்சு!
Local
09 September 2026
இந்திய பாதுகாப்பு அமைச்சரின் பயணத்தின் எதிரொலி - கொழும்பு வந்தடைந்தது 'ஐ.என்.எஸ் உதயகிரி' போர்க்கப்பல்
Local
09 September 2026
இந்தியாவில் இதுவரை எங்குமே கண்டறியப்படாத 5 ஓராங்குட்டான் குட்டிகள் ஒடிசாவில் மீட்பு!
Local
09 September 2026
உள்நாட்டு தீவிரவாதிகளால் தான் அதிக ஆபத்து: அமெரிக்கர்களை மிரள வைக்கும் புதிய கருத்துக்கணிப்பு முடிவு!
Local
09 September 2026
நோர்வூட் அஸ்வெசும நிதி மோசடி: இரண்டு பெண் சந்தேகநபர்கள் விளக்கமறியலில்!
Local
09 September 2026
இணையத்தை கலக்கும் 80s ட்ரெண்ட்: முதலமைச்சர் விஜய்யுடன் நடிகர் சதீஷ் வெளியிட்ட கலக்கல் நிழற்படம்!
Local
09 September 2026