சதொச விற்பனை நிலையங்களில் அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு நிலவுவதுடன், வெளிச்சந்தையை விட சதொசவில் பொருட்களின் விலை அதிகமாகக் காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சானக மதுகொட குற்றஞ்சாட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று வாய்மூலக்கேள்வி நேரத்திலேயே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.
சதொசவில் பொருட்கள் வாங்குவதற்காகச் செல்லும் நுகர்வோர் ஏமாற்றத்துடன் திரும்புவதாகவும், ஒரே வாரத்திற்குள் சீனி, பருப்பு மற்றும் அரிசி ஆகியவற்றின் விலை குறிப்பிடத்தக்க அளவு உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தனியார் பல்பொருள் அங்காடிகளை விடவும் சதொசவில் பொருட்களின் விலை அதிகமாக இருப்பது அரசாங்கத்தின் நுகர்வோர் பாதுகாப்பு உறுதிமொழியைக் கேள்விக்குறியாக்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதற்குப் பதிலளித்துப் பேசிய வர்த்தக அமைச்சர் ஆர்.எம். ஜயவர்தன, கடனில் மூழ்கியிருந்த சதொச நிறுவனத்தை தற்போதைய அரசாங்கம் மீட்டு எடுத்து வருவதாகத் தெரிவித்தார்.
கேள்விப்பத்திர முறையிலான கொள்முதல் தாமதங்களே பொருள் தட்டுப்பாடிற்குக் காரணம் எனக் குறிப்பிட்ட அவர், இந்தப் பிரச்சனைக்குத் தீர்வாக அனைத்து மாவட்டங்களிலும் மொத்த விநியோகக் களஞ்சியங்கள் அமைக்கப்பட்டு, வெளிச்சந்தையை விடக் குறைந்த விலையில் பொருட்கள் விநியோகிக்கப்படும் என உறுதியளித்தார்.
Latest News
பிற்பகல் 2 மணிக்குப் பின் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம் : பொதுமக்கள் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தல்!
Local
10 September 2026
தந்தி வழிப் பணப் பரிமாற்றம்: அமெரிக்க டொலர்ளை வெளிநாடுகளுக்கு அனுப்பியவர் மருதானையில் கைது
Local
10 September 2026
"இன்றைக்கும் தழும்புகள் இருக்கு..." : சட்டப்பேரவைச் சர்ச்சைக்கு மு.க.ஸ்டாலின் விளக்கம்!
Local
10 September 2026
பொலன்னறுவையில் கோர விபத்து : கால்வாயில் கவிழ்ந்த பேருந்து - 20 பேர் மருத்துவமனையில் அனுமதி!
Local
10 September 2026
நாடலி ஹார்ப் உள்ளிட்ட நெருக்கமான உதவியாளர்களுக்கு பணப்பரிசு வழங்கிய டொனால்ட் ட்ரம்ப்
Local
10 September 2026
மத்திய கிழக்கில் தற்போது என்ன நடக்கிறது? - 3 நிமிடங்களில் சுருக்கமாக!
Local
10 September 2026
களுபோவில வீடொன்றின் மீது கைக்குண்டு வீச்சு!
Local
10 September 2026
பிலிப்பைன்ஸில் கப்பலில் தீப்பரவல்: 5 பேர் உயிரிழப்பு!
Local
10 September 2026
அணுவாயுதம் வைத்திருப்பவர்களும் ஈரானின் நாகரிகத்தை அச்சுறுத்துவோரும் நியாயம் பேச தகுதி அற்றவர்கள் - ஈரான் துணை ஜனாதிபதி கண்டனம்
Local
10 September 2026
நவம்பர் தேர்தலுக்கு பிறகு ஈரானுக்கு எதிரான போர் உடன் முடிவுறும்: மசகு எண்ணெய் விலையும் குறையும் : அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவிப்பு
Local
10 September 2026