நோர்வூட் பிரதேச செயலகத்தில் 2 கோடி ரூபாய்க்கும் அதிகமான அஸ்வெசும நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள, அங்குள்ள பிரிவு பொறுப்பாளர்களான இரண்டு பெண் சந்தேகநபர்களையும் எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க ஹட்டன் நீதவான் பீட்டர் போல் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த இருவரும் நேற்று (08) ஸ்கைப் தொழில்நுட்பம் ஊடாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த மோசடி தொடர்பில் மேலும் 13 சந்தேகநபர்கள் கைது செய்யப்படவுள்ளதாகவும், மோசடி செய்யப்பட்ட தொகை 2 கோடி ரூபாயைத் தாண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து, குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் குற்ற விசாரணைப் பிரிவு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
இதனிடையே, நிதி அமைச்சு மற்றும் நுவரெலியா மாவட்ட செயலக அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணைகளில், ஹட்டன் வலயக் கல்வி அலுவலகத்தின் கீழ் பணியாற்றும் 6 ஆசிரியர்களின் வங்கிக் கணக்குகளுக்கும் சந்தேகத்திற்கிடமான முறையில் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோனின் அறிவுறுத்தலின் பேரில், குறித்த 6 ஆசிரியர்களின் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், அவர்களின் வங்கிக் கணக்குகள் தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மேலும், பிரதான சந்தேகநபர்களில் ஒருவரின் சகோதரரின் வங்கிக் கணக்கிலும் பெருமளவு பணம் வரவு வைக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, நுவரெலியா மாவட்ட செயலகத்தில் உயர் பதவி வகித்த குறித்த சந்தேகநபரின் பணியையும் தற்காலிகமாக இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
Latest News
நீண்ட நாள் காதலி எமிலி ரெட்வுட்டை கரம்பிடித்தார் அவுஸ்திரேலிய நட்சத்திர வீரர் கெமரூன் கிரீன்!
Local
13 September 2026
நாய்களைப் பதிவு செய்யத் தவறினால் 2,000 ரூபா அபராதம்: புதிய சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!
Local
13 September 2026
முதல் இருபதுக்கு 20: அபிஷேக் சர்மாவுடன் களமிறங்கப்போகும் வீரர் யார் ? சூர்யவன்ஷியா ? சாம்சனா ?
Local
13 September 2026
வரலாற்றில் முதன்முறை: இரகசிய நீதிமன்ற உத்தரவால் அமெரிக்காவிலிருந்து ஆப்கான் பெண் நாடுகடத்தல்
Local
13 September 2026
ஊழல்வாதிகளை பாதுகாக்கும் "பிற்போக்கு சிந்தனை” கொண்ட சிறிய குழுவே எஞ்சியுள்ளது- ஜனாதிபதி
Local
13 September 2026
டெஸ்ட் கிரிக்கெட்: ஸ்டீவ் ஸ்மித்தின் சாதனையை முறியடித்து ஜோ ரூட் முதலிடம்!
Local
13 September 2026
வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடி ஆட்டம் சவாலாக இருக்கும்: ஆப்கானிஸ்தான் தலைவர் இப்ராஹிம் சத்ரான் கூற்று!
Local
13 September 2026
மக்கள் மீது அதிகாரம் செலுத்தும் அரசியல் யுகம் முடிந்துவிட்டது!- ஜனாதிபதி
Local
13 September 2026
சூடுபிடிக்கும் கொழும்பு அரசியல் களம் - மாபெரும் பலத்தைக் காட்ட ஒன்றுதிரளும் சஜித் அணி!
Local
13 September 2026
வானூர்தி கடத்தலை சாதுரியமாக முறியடித்த இலங்கையின் முதல் பெண் இராஜதந்திரி மானெல் அபேசேகர மறைவு!
Local
13 September 2026