General09 September 2026

மேலதிக விசாரணைகளுக்காக மேல் மாகாண வடக்கு குற்றத் தடுப்பு பிரிவுக்கு அழைத்து செல்லப்பட்ட “கொண்ட ரஞ்சித்”!

கைது செய்யப்பட்ட “கொண்ட ரஞ்சித்” என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு உறுப்பினர், மேலதிக விசாரணைகளுக்காக மேல் மாகாண வடக்கு குற்றத் தடுப்பு பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் ஒருங்கிணைப்பு செயலாளர் சமீர மனஹாராவின் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த முக்கிய சந்தேக நபர் “கொண்ட ரஞ்சித்” இன்று டுபாயிலிருந்து நாட்டிற்கு அழைத்து வரப்பட்டு கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes