General09 September 2026

இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை போதைப்பொருள் கடத்தல்காரர்கள்: ஜனாதிபதி விடுத்த கோரிக்கை

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் இடம்பெறும் போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பதற்கு இந்தியாவின் முழுமையான ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், இந்தியாவில் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை போதைப்பொருள் கடத்தல்காரர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்கும் இந்தியாவின் முழுமையான ஒத்துழைப்பு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

நாட்டுக்கு பயணம் செய்துள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு இடையிலான சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு, பொருளாதாரம், கடல்சார் மற்றும் பிராந்திய ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.

போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக இலங்கை தற்போது முன்னெடுத்து வரும் தேசிய வேலைத்திட்டம் தொடர்பிலும் ஜனாதிபதி இந்திய பாதுகாப்பு அமைச்சருக்கு விளக்கமளித்துள்ளார்.

இந்தியப் பெருங்கடல் பிராந்தியம் போதைப்பொருள் கடத்தலுக்கான முக்கிய மையமாக மாறியுள்ள நிலையில், அதனைத் தடுப்பதற்கு இந்தியாவின் ஆதரவு அவசியம் என்று ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes