தலவத்துகொட பகுதியில் வானூர்தி பயணச்சீட்டு மற்றும் விசா வழங்கும் நிறுவனமொன்றில் இடம்பெற்ற, 6 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம் மற்றும் தங்கப் பொருட்கள் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால் முல்லேரியாவில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது கொள்ளைச் சம்பவத்திற்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சிற்றூந்து ஒன்று சந்தேகநபரின் வீட்டிலிருந்து காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.
கடந்த முதலாம் திகதி நான்கு பேர் கொண்ட குழுவொன்று, நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் ஊழியர்களை கூர்மையான ஆயுதங்களைக் காட்டி அச்சுறுத்தி, இந்தக் கொள்ளை சம்பவத்தை மேற்கொண்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
Latest News
வான்கடே மைதானத்தின் சிறப்பு வரவேற்பறைகளுக்கு சூட்டப்படவுள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர்களின் பெயர்கள்: மும்பை கிரிக்கெட் சங்கம் தீர்மானம்!
Local
12 September 2026
தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் திசைதிருப்பும் தற்போதைய அரசு: செல்வம் அடைக்கலநாதன் குற்றச்சாட்டு
Local
12 September 2026
அஜித் - விஜய் சந்திப்பால் அனைத்து நுழைவுச்சீட்டுகளும் விற்றுத் தீர்ந்தன
Local
12 September 2026
சாலமன் பாப்பையாவின் பூதவுடலுக்கு முழு அரச மரியாதையுடன் இறுதிக் கிரியை
Local
12 September 2026
கொழும்பு இசை நிகழ்ச்சி சர்ச்சை: நியோ தரப்பில் குற்றச்சாட்டுகள் நிராகரிப்பு
Local
12 September 2026
பட்டாசு வெடித்து 13 வயது சிறுவன் பலி! ஆலய உற்சவத்தில் நடந்த கொடூரம்
Local
12 September 2026
62 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளில் நாளை மறுதினம் முதல் டெங்கு கட்டுப்பாட்டு வாரம்
Local
12 September 2026
AI நிழற்படங்கள் குறித்து அதிருப்தி: கிளியான் எம்பாப்பே கவலை!
Local
12 September 2026
செங்கடல் நுழைவாயிலைக் கைப்பற்றிய ஹவுதிகள்: சவூதி எண்ணெய் குழாய்ப் பாதை தற்காலிகமாக மூடல்!
Local
12 September 2026
2030 உலகக் கிண்ண இறுதிப்போட்டி: மொரோக்கோவின் உரிமைக்கோரலுக்கு ஃபீஃபா மறுப்பு
Local
12 September 2026