General10 September 2026

தந்தி வழிப் பணப் பரிமாற்றம்: அமெரிக்க டொலர்ளை வெளிநாடுகளுக்கு அனுப்பியவர் மருதானையில் கைது

2023 முதல் 2025ஆம் ஆண்டுக்குள் தந்தி வழிப் பணப் பரிமாற்றம் (T/T) மூலம் 80 மில்லியன் அமெரிக்க டொலர்களை (சுமார் 23 பில்லியன் ரூபாய்) வெளிநாட்டுக் கணக்குகளுக்கு மாற்றியதாகக் கூறப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காவல்துறையின் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மருதானையில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes