2027ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய கல்வி மறுசீரமைப்புகளுக்கு அமைய, சாதாரண தரப் பரீட்சையை 7 பாடங்களாக மட்டுப்படுத்துவதற்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தலைமையில் இடம்பெற்ற, புதிய கல்வி மறுசீரமைப்புகளின் முன்னேற்றம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பில் ஆராய்வதற்கான நாடாளுமன்ற துணைக்குழுக் கூட்டத்திலேயே இந்த விடயம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ, இது தொடர்பான அறிக்கையை குறித்த கூட்டத்தில் சமர்ப்பித்துள்ளார்.
அதற்கமைய, புதிய பாடத்திட்டக் கட்டமைப்பின் கீழ், ஒரு பாடவேளை 40 நிமிடங்களாகவும், பாடசாலை நேரம் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை நடத்தவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
சாதாரண தரப் பரீட்சை 7 பாடங்களை உள்ளடக்கியதாக அமையும் எனவும், வரலாறு மற்றும் அழகியல் பாடங்களும் இதில் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாய்மொழி, ஆங்கிலம், விஞ்ஞானம், கணிதம் மற்றும் சமயம் உள்ளிட்ட கட்டாயப் பாடங்களுக்கு தொடர்ச்சியான மற்றும் தொகுப்பு மதிப்பீட்டு முறைகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.
மேலும், 10 மற்றும் 11ஆம் தரங்களில் தொழிற்கல்விப் பாடங்களை அறிமுகப்படுத்தவும், 12 மற்றும் 13ஆம் தரங்களில் சமூக நல்லிணக்கம், சட்டம் மற்றும் ஒழுக்கநெறி தொடர்பான பாடத் தொகுதிகளை உள்ளடக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
Latest News
பயணிகள் வானூர்தியில் லண்டனுக்கு சென்றடைந்தார் முதலமைச்சர் விஜய் - காரணம் என்ன?
Local
11 September 2026
பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர் : முன்னிலை வகிக்கும் இங்கிலாந்து!
Local
11 September 2026
ஈராக்கின் ஆயுதக்குழுவுக்கு எதிராக தடை விதித்த அமெரிக்கா!
Local
11 September 2026
தெஹிவளையில் கைக்குண்டு தாக்குதலில் இரண்டு சிறார்கள் பலி தந்தை படுகாயம்
Local
11 September 2026
கியானி இன்ஃபான்டினோவுக்கான தமது ஆதரவை விலக்கிக்கொண்ட பிரான்ஸ் கால்பந்தாட்ட அமைப்பு!
Local
11 September 2026
சிரேஷ்ட அமெரிக்கர்களுக்கு 5 ஆயிரம் டொலர்களை வழங்கப்போகும் ட்ரம்ப்!
Local
11 September 2026
20 ஆண்டுகளாக ஒரே எண்களைத் தேர்ந்தெடுத்து லொத்தரில் ரூ.1.30 கோடி வென்ற பெண்!
Local
11 September 2026
தெஹிவளையில் வீடொன்றின் மீது கைக்குண்டு தாக்குதல்!
Local
11 September 2026
ஹவுதி அமைப்பிற்கு பாகிஸ்தான் எச்சரிக்கை: "செங்கல்லுக்கு பதிலாக கல்லைக் கொண்டு பதிலடி தரத் தேவையில்லை
Local
11 September 2026
ஆசிய செம்பியன்ஸ் லீக்கில் ரொனால்டோவின் அல்-நஸர்: 3 ஆவது தொடர்ச்சியான கிண்ணத்தை வெல்ல சவுதி அணிகள் தீவிரம்!
Local
11 September 2026