மட்டக்களப்பு, கிரான் கூளாக்காடு சித்தி விநாயகர் ஆலய உற்சவத்தின்போது வெடித்த பட்டாசு காரணமாக 13 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று (11) வெள்ளிக்கிழமை இரவு சுமார் 11.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கிரான் கூனாக்காடு பகுதியைச் சேர்ந்த நித்தியானந்தன் தனுஸ்கி என்ற 13 வயது சிறுவனே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
ஆலய உற்சவம் நடைபெற்று வந்த நிலையில், நேற்று இரவு பூஜை வழிபாடுகளின்போது பெரிய வெடி ஒன்று கொளுத்தப்பட்டதாகவும், அது வெடிக்காத நிலையில் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பின்னர், வெடிக்காத நிலையில் காணப்பட்ட அந்த வெடியை சிறுவன் பார்வையிடுவதற்காக அருகில் சென்றபோது, அது திடீரென வெடித்துள்ளதாக காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதன்போது படுகாயமடைந்த சிறுவன் உடனடியாக வாழைச்சேனை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சிறுவனின் உடலம் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
Latest News
மக்கள் மீது அதிகாரம் செலுத்தும் அரசியல் யுகம் முடிந்துவிட்டது!- ஜனாதிபதி
Local
13 September 2026
சூடுபிடிக்கும் கொழும்பு அரசியல் களம் - மாபெரும் பலத்தைக் காட்ட ஒன்றுதிரளும் சஜித் அணி!
Local
13 September 2026
வானூர்தி கடத்தலை சாதுரியமாக முறியடித்த இலங்கையின் முதல் பெண் இராஜதந்திரி மானெல் அபேசேகர மறைவு!
Local
13 September 2026
வெளிப்புற எதிரியை விட நாட்டுக்குள் இருக்கும் எதிரியே மிகவும் ஆபத்தானவன் - மகிந்த ராஜபக்ஷ
Local
13 September 2026
24 வயதில் உயிரிழந்த பிரபல முஃபாங் இன்ஃப்ளூயன்சர் – இறுதிப் பதிவு ஏற்படுத்திய அதிர்ச்சி!
Local
13 September 2026
பொன்சேகா வழக்கு சந்தேகநபர் மீதான பிணை உத்தரவை எதிர்த்து சட்டமா அதிபர் மேன்முறையீடு!
Local
13 September 2026
சிறுவயதுத் தோழி தான் சொந்தச் சகோதரியா? : 15 வருடங்களுக்குப் பின் வெளிவந்த உண்மை - சினிமா கதையை மிஞ்சிய உண்மையான நெகிழ்ச்சி சம்பவம்!
Local
13 September 2026
முதல் இருபதுக்கு 20: சூர்யவன்ஷிக்கு வாய்ப்பளிக்க வேண்டும்; சஞ்சு சாம்சனுக்கு ஓய்வளித்தாலும் எந்தத் தவறும் இல்லை!
Local
13 September 2026
வாகன இலக்கத் தகடுகளை விரைவாக விநியோகிக்க புதிய நடவடிக்கை - மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம்
Local
13 September 2026
பிரதமர் மோடியின் சர்வதேச ராஜதந்திரத்திற்கு ரவி சாஸ்திரி புகழாரம்: 'பாரத் மண்டப' புகைப்படத்துடன் பெருமிதம்!
Local
13 September 2026